சுவாமிமலை

imported>Kuzhali.india பயனரால் செய்யப்பட்ட 15:21, 1 ஆகத்து 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (சிறுமாற்றம்)

சுவாமிமலை (ஆங்கிலம்:Swamimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]

சுவாமிமலை
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் தேவராதாகிருஷ்ணன்
மக்கள் தொகை 6,982 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


25 மீட்டர்கள் (82 அடி)

குறியீடுகள்


புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°57′N 79°20′E / 10.95°N 79.33°E / 10.95; 79.33[4]. ஆகும்.கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் இருக்கின்றது.கும்பகோணத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள ஊர்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சுவாமிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% அதிகம். சுவாமிமலை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அறுபடைவீடு

 
ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையின் தோற்றம்.

இங்கே உள்ள முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஒன்றானது. தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. இவ்வூரின் பிற பெயர்களில், திருவேரகம் என்பதும் ஒன்று. சுவாமிமலை வெண்கல சிலை வடித்தல் கலையில் பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று.

திருப்புகழில், திருவேரகத்தில் உள்ள முருகனை அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்:

பாடல் 226

இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து ......அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் துறைவோனே... (வெற்பு = மலை)

சப்தஸ்தானம்

சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். [6]

பஞ்சகுரோசத்தலங்கள்

சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. [7]

மேற்கோள்

திருப்புகழ், பகுதி-2, அருணகிரிநாதர், உரை டாக்டர் தணிகைமணி செங்கல்வராய பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பத்திப்புக் கழகம், சென்னை-18. 1999.

வெளி இணைப்புகள்

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் புகைப்படம்

  • தரைப்படம், வழிப்படம் அல்லது வரைபடம் [1]
  • வெண்கல வார்ப்புக்கலை, அறிவியல் ஏட்டுக் கட்டுரை, அக்டோபர் 2002, 'சேர்னல் ஆ'வ் மெட்டல் (JOM, Journal of Metals)[2]
  • தமிழ்நாடு சுற்றுலாத் துறை தரும் செய்தி [3]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  4. Falling Rain Genomics, Inc - Swamimalai
  5. http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Kumbakonam Taluk;Swamimalai (TP) Town
  6. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992
  7. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)


"https://tamilar.wiki/w/index.php?title=சுவாமிமலை&oldid=200439" இலிருந்து மீள்விக்கப்பட்டது