இராகி
| இராகி | |
|---|---|
இரவி வர்மா ஓவியத்தில், இராகி தெய்வம் | |
| வேறு பெயர்கள் | இராகிமை |
| தேவநாகரி | राही |
| சமசுகிருதம் | Rāhi |
| வகை | இராதை |
| இடம் | பண்டரிபுரம் |
| துணை | விட்டலர் |
| சமயம் | மகாராட்டிரம், இந்தியா |
| வைணவம் தொடரின் ஒரு பகுதி |
|---|
இராகி (Rahi) இராகிமாய் என்றும் அழைக்கப்படுகிறார். இது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள இந்து தெய்வமான இராதையின் ஒரு பிராந்திய வடிவமாகும். இவர் கிருஷ்ணரின் உள்ளூர் வடிவமான விதோபாவுடன் (விட்டல்) தொடர்புடையவர்.
உள்ளூர் புராணங்களின்படி, இராகி விதோபாவின் மனைவி.[1] இந்தியச் சமூகவியலாளர் ஜி. எசு. குர்யே, "இராகி" என்ற பிராந்திய வடிவம் இராதாவின் மற்றொரு பெயரான "இராதிகா" என்பதிலிருந்து தோன்றியது என்று கூறுகிறார்.[2]
வழிபாடு
இராகி (இராதை) பண்டரிபுரத்தில் உள்ள விதோபா கோவில் வளாகத்தில் வழிபடப்படுகிறார்.[3] கிருஷ்ணரின் மற்றொரு மனைவியான சத்யபாமாவின் சன்னதியுடன் சேர்ந்து, இவரது முதன்மை மனைவியான ருக்குமணியின் கோவிலுக்குத் தெற்கே அருகில் உள்ளது.[4][5][6]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Pande, Dr Suruchi (2008). "Vithoba of Pandharpur". Prabuddha Bharat 113: 447. http://www.advaitaashrama.org/pb_archive/2008/PB_2008_August.pdf. ""Rahi is Radha. In the stories and legends of Maharashtra, Rahi is the wife of Vitthala."".
- ↑ Pillai, S. Devdasa (1997). Indian Sociology Through Ghurye, a Dictionary. India: Popular Prakashan. p. 367. ISBN 81-7154-807-5.
The other two consorts of Vithoba - Satyabhama and Rahi, (the latter derived from Radha or Radhika) are also deified in the temple
- ↑ Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. p. 294. ISBN 978-0-14-341421-6.
- ↑ "The Gazetteers Department - Pandharpur". 2010-03-30. Archived from the original on 30 March 2010. Retrieved 2022-01-11.
- ↑ Lokmat (2021-07-17). "Ashadhi Ekadashi 2021 : समस्त देवतांपैकी एकमेव पांडुरंगाची मूर्तीच नि:शस्त्र का? हे आहे कारण..." Lokmat (in மராத்தி). Retrieved 2022-01-11.
- ↑ Shima, Iwao (1988-05-01). "The Vithobā faith of Mahārāsastra: The Vithobā Temple of Pandharpūr and its mythological structure". Japanese Journal of Religious Studies 15 (2–3). doi:10.18874/jjrs.15.2-3.1988.183-197. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-1042.