கைலாசு புரி
| இயற்பெயர் | கைலாசு புரி |
|---|---|
| பிறந்ததிகதி | 17 ஏப்ரல் 1925 |
| பிறந்தஇடம் | இராவல்பிண்டி |
| இறப்பு | 9 சூன் 2017 |
| புனைபெயர் | கம்ராசு மாசி |
| பணி | எழுத்தாளர் ஆலோசகர் கவிஞர் யோகா ஆசிரியர் |
| பிள்ளைகள் | 3 |
கம்ராசு மாசி (Kailash Puri)(17 ஏப்ரல் 1925 - 9 சூன் 2017) என்று பிரபலமாக அழைக்கப்பட்ட கைலாசு புரி ஓர் இந்திய எழுத்தாளரும், கவிஞரும், யோகா ஆசிரியரும், ஆலோசகரும் ஆவார். 1975ஆம் ஆண்டில், மார்க்சு & இசுபென்சரின் இந்திய ஆயத்த உணவுகள் பிரிவில் முதல் ஆலோசகரானார் ஆவார். இதே ஆண்டில் ஹைலைட்சு ஆஃப் இந்தியன் குக்கரி என்ற தனது சமையல் புத்தகத்தை வெளியிட்டார்.
பிறப்பு
கைலாசு புரி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி[1] பிரிக்கப்படாத இந்தியாவிலிருந்த இராவல்பிண்டியில் சோகன் சிங் பூரி, பிரேம் தம்பதியரின் மகளாகப் பிறந்தார்.[2][3]
வாழ்க்கை வரலாறு
1943ஆம் ஆண்டு, தனது 16 வயதில், புரி கோபால் சிங் புரியை மணந்தார். இவர் இங்கிலாந்தில் இலண்டனில் ஆய்வு மேற்கொள்ள இந்திய அரசின் ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்ற விஞ்ஞானி ஆவார்.[3] 1945ஆம் ஆண்டு புரி அவருடன் இணைந்தார். இவர்களுக்கு 1947ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது (மகன்).[3] இவர்கள் 1950-இல் இந்தியா திரும்பினர்.[3] இளம் தாயாக, புரி சமையல், குடும்ப திட்டமிடல், திருமண உறவுகள் குறித்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். இவற்றை வாராந்திரப் பஞ்சாபி பத்திரிகையான சுபகவதியில் (1957-1965) வெளியிட்டார்.[3][4] புரி தனது கணவருடன் தேராதூன், புனே, அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இபாடன் மற்றும் குமாசிக்கும் கணவரின் பணிகாரமாகப் பயணித்தார்.[3]
1966ஆம் ஆண்டில், பூரிக்கு இரண்டு மகள்கள் பிறந்த நேரத்தில், மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பி, சுலோ மற்றும் சவுத்தாலில் குடியேறியனர்.[3] இவரது கணவர் பணிகாரமாக லிவர்பூலுக்குச் செல்வதற்கு முன்பு, இவர் தொழிற்சாலைகளிலும் பின்னர் ஹாரோ நிலப் பதிவுத் துறையிலும் பணிபுரிந்தார். இருப்பினும் இந்த வேலைப்பளுவுடன் பஞ்சாபி, சமையல் கலையையும் கற்பித்தார்.[3] லிவர்பூலில் இவர் பன்முகக் கலாச்சாரப் பிரிட்டன் குறித்து விரிவுரைகளை நிகழ்த்தினார். மேலும் சமூக உறவுகள் குழுவின் நிறுவன உறுப்பினரானார்.[3] இங்கு, இவர் முன்னாள் சுபகவதியை உள்ளடக்கிய ஓர் ஆங்கில, பஞ்சாபி பத்திரிகையான ரூப்வதியினை (1968-1974) வெளியிட்டார்.[4] தேஸ் பர்தேசுக்கு பங்களிப்பு செய்தார். மாதாந்திர பஞ்சாபி பத்திரிகையான கௌமி ஏக்தாவில், பாலியல் பிரச்சினைகள் குறித்த சிறப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.[3] இவர் தனது வாழ்நாளில் பாலியல் குறித்து பத்துப் புத்தகங்களை எழுதியதால், கம்ராசு மாசி என்று பிரபலமாக அறியப்பட்டார்.[3] பஞ்சாபியில் மொழிபெயர்க்கக் கடினமாக இருக்கும் பாலியல் சொற்களுக்கு, பெண்குறிக் காம்பிற்கு "மதன் சத்ரி" (மன்மதனின் குடை), அதன் சுற்றியுள்ள முடிக்கு "பஷ்ம்" (பட்டு) உள்ளிட்ட புதிய சொற்களை உருவாக்கினார்.[2][3]
1975ஆம் ஆண்டில், இவர் மார்க்சு & இசுபென்சரின் இந்திய ஆயத்த உணவு வகைகளின் முதல் ஆலோசகரானார்.[2][5] இதே ஆண்டில் இவர் தனது சமையல் புத்தகமான ஹைலைட்சு ஆஃப் இந்தியன் குக்கரியை வெளியிட்டார்.[3]
21 வருடங்களாகப் புரி தனது கணவருடன் சேர்ந்து ஒரு யோகா மையத்தை நிர்வகித்து வந்தனர்.[6][7]
விருதுகள்
1982-இல் புரி பாய் மோகன் சிங் வைத் இலக்கிய விருதைப் பெற்றார்.[3] 1999ஆம் ஆண்டு ஈலிங்கின் மாநகரத்தந்தை இவருக்கு மில்லினியம் வுமன் விருதை வழங்கினார்.[3]
இறப்பு
கணவர் இறந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சூன் 9, 2017 அன்று புரி ஈலிங் மருத்துவமனையில் இறந்தார்.[3]
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்
- இந்திய உணவு வகைகளின் மர்மங்கள் விளக்கப்பட்டது: இந்திய சமையலுக்கு ஆங்கிலேயரின் வழிகாட்டி (Mysteries of Indian Cuisine Explained: Englishman's Guide to Indian Cookery)(1975)
- The Myth of UK Integration (in ஆங்கிலம்). Whittles Publishing. 2012. ISBN 978-184995-059-6.(பாப் விட்டிங்டனுடன் இணைந்து எழுதியது)
- Pool of Life: The Autobiography of a Punjabi Agony Aunt (in ஆங்கிலம்). Liverpool University Press. 2014. ISBN 978-1-78284-067-1.(எலீனோர் நெஸ்பிட்டுடன் இணைந்து எழுதியது)
மேற்கோள்கள்
- ↑ "BBC Radio 4 - Last Word". BBC. Archived from the original on 1 February 2025. Retrieved 1 February 2025.
- ↑ 2.0 2.1 2.2 Chandan, Amarjit (4 July 2017). "Kailash Puri obituary". The Guardian இம் மூலத்தில் இருந்து 1 February 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250201094309/https://www.theguardian.com/books/2017/jul/04/kailash-puri-obituary.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 Nesbitt, Eleanor. "In Remembrance: Kailash Puri (1925-2017)" (PDF). Archived from the original (PDF) on 1 February 2025. Retrieved 30 January 2025.
- ↑ 4.0 4.1 Bebber, Brett (2024). "2. South Asians in Britain: Migration, settlement, and conflict". In Sahoo, Ajaya K. (ed.). Routledge Handbook of South Asian Migrations (in ஆங்கிலம்). Abingdon, Oxon: Taylor & Francis. p. 64. ISBN 978-1-032-35544-3.
- ↑ "The history of M&S prepared meals". www.marksandspencer.com. Archived from the original on 1 February 2025. Retrieved 1 February 2025.
- ↑ Newcombe, Suzanne (30 June 2019). "The undocumented history of female yoga teachers in Britain". The Independent. https://www.independent.co.uk/life-style/women/history-female-yoga-teachers-britain-india-a8968676.html.
- ↑ Jewell, Albert (1999). Spirituality and Ageing (in ஆங்கிலம்). Jessica Kingsley Publishers. p. 171. ISBN 978-1-85302-631-7.
நூல் பட்டியல்
- Puri, Kailash; Nesbitt, Eleanor (2013). Pool of Life: The Autobiography of a Punjabi Agony Aunt (in ஆங்கிலம்). Liverpool University Press. ISBN 978-1-78284-067-1.
மேலும் படிக்க
- Puri, Kailash (2002). "1. Behind open doors". From Across the Shores: Punjabi Short Stories by Asians in Britain (in ஆங்கிலம்). Sterling Publishers Pvt. Ltd. p. 16. ISBN 978-969-494-124-0.