தோக்கவாடி
Jump to navigation
Jump to search
தோக்கவாடி | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 637209 |
தோக்கவாடி (Thokkavadi) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊர் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரின் மொத்த மக்கள் தொகை 7549 ஆகும். இவர்களில் பெண்கள் 3061 பேரும் ஆண்கள் 4488 பேரும் உள்ளனர்.
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான நாமக்கலில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்செங்கோட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 376 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
நிருவாகம்
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2][3]