புரூலி புண்
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| புரூலி புண் | |
|---|---|
| படிமம்:Buruli ulcer left ankle EID.jpg | |
| கானாவைச் சேர்ந்த ஒருவரின் குதிக்காலில் உள்ள புரூலி புண். | |
| வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
| ஐ.சி.டி.-10 | A31.1 (ILDS A31.120) |
| ஐ.சி.டி.-9 | 031.1 |
| நோய்களின் தரவுத்தளம் | 8568 |
| ம.பா.த | D009165 |
புரூலி புண் என்பது (ஆங்கிலத்தில் /bəˈruːli/ [1] Buruli ulcer அல்லது Bairnsdale ulcer எனப்படுவது) ஒரு தொற்று நோயாகும். இதன் நோய்க்காரணி மைக்கோ பக்டீரியன் அல்சரன்சு (Mycobacterium ulcerans) ஆகும். இதே இனத்தைச் சேர்ந்த பக்டீரியாக்களான மை. ரியூபகுளோசிசு காசநோயையும் மை. லெப்ரே தொழு நோயையும் ஏற்படுத்துகின்றன.
குணங்குறிகள்
தொற்று பொதுவாக தோலின் கீழ் ஏற்படும் வலியற்ற திரட்சிகள் மூலம் இனங்காணமுடியும். தென் அவுத்திரெலியாவில் தோலின் மேற்பரப்பில் பருக்கள் தோன்றுவதுடன் கூட இதன் அறிகுறிகள் தொடங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது. கைகள் பாதம் என்பவற்றில் அறிகுறிகள் தோன்றுவதிலும் பார்க்க முன்கைப்பகுதில் மற்றும் சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பகுதிகளில் அதிகம் ஏற்படும். குழந்தைகளில் முகம் வயிறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது நோயின் உச்சகட்டத்தில் வீக்கத்துடன் காய்ச்சல் ஏற்படும்.
சான்றுகள்
- ↑ Macquarie Dictionary, eighth edition, 2020
வெளியிணைப்புகள்
- SciDev.net கட்டுரை [1]
படத்தொகுப்பு
-
இடது கையில் புரூலிப் புண் கொண்ட17-நைஜீரிய சிறுவன்.