பேங்குனர்
பேங்குனர் Bankner | |
|---|---|
| ஆள்கூறுகள்: 28°50′53″N 77°04′17″E / 28.84819°N 77.07144°E | |
| நாடு | |
| ஒன்றியப் பிரதேசம் | தில்லி |
| மாவட்டம் | வடக்கு தில்லி மாவட்டம் |
| வட்டம் (தாலுகா) | நரேலா |
| அரசு | |
| • வகை | அரசாங்கம் |
| • நிர்வாகம் | தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 21,085 |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்தி, அரியான்வி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 110040 |
| இணையதளம் | {{URL|example.com|optional display text}} |
பேங்குனர் (Bankner) என்பது இந்தியாவின் தில்லி மாநிலத்தின் வடக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள நரேலா தாலுகாவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது நரேலா சட்டமன்றத் தொகுதியில் உள்ளது.
மக்கள் தொகையியல்
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] பேங்குனர் கிராமத்தின் மக்கள் தொகை 21085 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 52% மற்றும் பெண்கள் 48% இருந்தனர். பேங்குனர் கிராமத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 80% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகம் ஆகும். ஆண்களில் 85% மற்றும் பெண்கள் 75% கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் 16% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாவர்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பேங்குனர் கிராமத்தின் மக்கள் தொகை 14788 ஆகும். இம்மக்கள் தொகையில் 8042 ஆண்களும் 6746 பெண்களும் இருந்தனர். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 2011 ஆகும். இது பேங்குனர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.60% ஆகும். பேங்குனர் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 86.21% என்பதை விட குறைவாக 81.08% இருந்தது. இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் சுமார் 87.86% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.06% ஆகவும் இருந்தது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Bankner Census Town City Population Census 2011-2025 | Delhi". www.census2011.co.in. Retrieved 2025-09-18.