முகவெலும்பு
Jump to navigation
Jump to search
| முகவெலும்புகள் | |
|---|---|
| படிமம்:Facial skeleton - en.svg 14 முகவெலும்புகள். | |
| படிமம்:Facial bones - animation02.gif 14 முகவெலும்புகள் மண்டையோட்டுன்
நீலம்: மூக்குச்சுவர் எலும்பு (1)
மஞ்சள்: மேல்தாடை எலும்பு (2)
ஊதா: கீழ்த்தாடை எலும்பு (1)
இளஞ்சிவப்பு: மூக்கெலும்பு (2)
சிவப்பு: அண்ணவெலும்பு (2)
வெளிர்நீலம்: கண்ணீர்க் குழாய் எலும்பு (2)
கரும்பச்சை: கன்ன எலும்புகள் (2)
வெளிர்பச்சை: கீழ்மூக்கு சங்கெலும்பு (2) | |
| விளக்கங்கள் | |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | ossa faciei, ossa facialia |
முகவெலும்புகள் (Facial bones) எனப்படுபவை மண்டையோட்டுடன் சேர்ந்து தலையோட்டை உருவாக்கும் எலும்புகள் ஆகும்[1]. இவை தலையோட்டின் முன், கீழ்ப் பகுதியில் அமைந்திருக்கும் எலும்புகளாகும். இவற்றுள் வாய்ப்பகுதியில் இருக்கும் முக்கிய எலும்பான தாடையெலும்பும் அடங்கும். முக எலும்புகள் என்பவை முகத்தில் அமைந்ததுள்ள 14 எலும்புகள் ஆகும்.
மனித முகவெலும்புகள்
மனித மண்டையோட்டிற்கு பெரும் ஆதாரங்களாக கீழ்காணும் 14 முகவெலும்புகளும் விளங்குகின்றன:[1][2][3]
- கீழ்மூக்கு சங்கெலும்பு (Inferior nasal concha) - 2
- கண்ணீர்க் குழாய் எலும்பு (Lacrimal bones) - 2
- கீழ்த்தாடை எலும்பு (Mandible) - 1
- மேல்தாடை எலும்பு (Maxilla) - 2
- மூக்கெலும்பு (Nasal bones) - 2
- அண்ணவெலும்பு (Palatine bones) - 2
- மூக்குச்சுவர் எலும்பு (Vomer) - 1
- கன்ன எலும்பு (Zygomatic bones) - 2
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Learn Bones/Skull Bones|Cranial and Facial Bones
- ↑ SEER Training Modules/Anatomy & Physiology/Skeletal System/Divisions of the Skeletal/Axial Skeletal, National Cancer Institute
- ↑ "Facial Bones- Definition from Merriam-Webster's Medical Dictionary". Archived from the original on 2008-05-27. Retrieved 2012-06-10.