காப்ரா

தியாகலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:17, 6 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{Infobox pharaoh | name = காப்ரா | alt_name = Khafre, Khefren, Suphis II., Saophis | image = Khafra.jpg | image_alt = | caption =பார்வோன் காப்ராவின் தலைச்சிற்பம், மெம்பிஸ் | role = | reign =கிமு 2558 -..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காப்ரா (Khafra) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் பழைய எகிப்து இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்டார்.[2] [3] இவர் மன்னர்களின் சமவெளியில் உள்ள கீசா நகரத்தில் கிமு 2500-இல் நிறுவிய இரண்டாவது பெரிய பிரமிடு காப்ரா பிரமிடு ஆகும்.[4] மேலும் இவரது உடல் கீசா நகரத்தின் பிரமிடில் அடக்கம் செய்யப்பட்டது.

காப்ரா
Khafre, Khefren, Suphis II., Saophis
படிமம்:Khafra.jpg
பார்வோன் காப்ராவின் தலைச்சிற்பம், மெம்பிஸ்
எகிப்தின் பாரோ
ஆட்சிக்காலம்கிமு 2558 - கிமு 2532 (26 ஆண்டுகள்)[1], நான்காம் வம்சம்
முன்னவர்ஜெதெப்பிரே
பின்னவர்மென்கௌரே
துணைவி(யர்)4
பிள்ளைகள்நெபெமாக்கேத் & 14
தந்தைகூபு
தாய்மெரிட்டீஸ்
பிறப்புகிமு 2575
இறப்புகிமு 2465
அடக்கம்காப்ரா பிரமிடு
நினைவுச் சின்னங்கள்காப்ரா பிரமிடு

இவர் பார்வோன் கூபுவின் மகன் ஆவார். இவருக்கு 4 மனைவிகளும், 15 குழந்தைகளும் இருந்தனர். இவருக்குப் பின் எகிப்தை இவரது மகன் மென்கௌரே ஆண்டார்.

படிமம்:Abydos KL 04-04 n23.jpg
அபிதோஸ் வம்சாவளி பட்டியலில் காப்ரேவின் பெயர்


படிமம்:Ägyptisches Museum Leipzig 035.jpg
பார்வோன் காப்ரே
படிமம்:Khafre.jpg
பெரிய ஸ்பிங்ஸ்வுடன் கூடிய காப்ரேவின் பிரமிடு, கீசா


படிமம்:Khafre statue.jpg
கீசா நகரத்தில் பார்வோன் காப்ரேவின் சிலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-491-96053-3, page 102.
  2. Khafra
  3. Khafre
  4. "Sphinx Project: Why Sequence is Important". 2007. Archived from the original on July 26, 2010. Retrieved February 27, 2015.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.





"https://tamilar.wiki/w/index.php?title=காப்ரா&oldid=316630" இலிருந்து மீள்விக்கப்பட்டது