பாபட்லா - 5204
பாபட்லா - 5204 (BPT 5204), வேளாண் பெயர்; சம்பா மசூரி (Samba Mashuri) எனப்படும் இந்த நெல் வகையானது, ஜி ஈ பி - 24 X டி என் 1 X மசூரி போன்ற மூன்று நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். குலைநோய் தாக்குதலை எதிர்த்து வளரக்கூடிய இந்நெல் வகை, "வானம் பார்த்த பூமி" எனப்படும் மானாவாரி நிலப்பகுகளில் பயிரிட ஏற்றதாக கருதப்படுகிறது. ஒழுங்குப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வர்க்கத்தைச் சார்ந்த இது, ஆந்திர மாநிலத்தின் நெல் வகையாகும்.[1] தென்னிந்தியாவின் ஆந்திர மாநில பாபட்லா மாவட்டம், பாபட்லாவில் அமைந்துள்ள "வேளாண் ஆராய்ச்சி நிலையம்", 1986 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக சம்பா மசூரி எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[2]
| பாபட்லா - 5204 |
|---|
| வேளாண் பெயர் |
| சம்பா மசூரி |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஜி ஈ பி - 24 X டி (என்) 1 X மசூரி |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 145 - 150 நாட்கள் |
| மகசூல் |
| 6000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1986 |
| வெளியீட்டு நிறுவனம் |
| வேளாண் ஆராய்ச்சி நிலையம், பாபட்லா |
| மாநிலம் |
| ஆந்திரப் பிரதேசம் |
| நாடு |
காலம்
நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 140 - 145 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[3] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், சம்பா, முன்சம்பா, பின்சம்பா, தாளடி, பிசாணம் மற்றும் பின்பிசாணம் போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Paddy Varieties of Tamil Nadu - Ruling Varieties - Long Duration - BPT 5204". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-22.
- ↑ "NOTABLEACHIEVEMENTSOFAGRICULTURAL RESEARCHSTATION, BAPATLA - Samba Mahsuri (BPT 5204)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-04. Retrieved 2018-06-08.