மானவதி
மானவதி கருநாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும். [1][2]
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த2 நி3 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம1 க1 ரி1 ஸ |
இதர அம்சங்கள்
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் பாவனி (41) ஆகும்.
- இதன் மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக காந்தாமணி (61) மேளகர்த்தா இராகத்தை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).
- இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.
ஜன்ய ராகங்கள்
| ஜன்ய ராகங்கள் |
|---|
| மனோ ரஞ்சனி |
| கான சியாமளா |
| குஞ்சரி |
உருப்படிகள்
| வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
|---|---|---|---|
| கிருதி | எவரிதோ நே தெல்புது | தியாகராஜ சுவாமிகள் | தேசாதி |
| கிருதி | நிஜ பக்திம் | கோடீஸ்வர ஐயர் | ரூபகம் |