அரி கௌதம்
அரி கௌதம் (Hari Gautam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணராவார். அரி பிரதாப் கௌதம் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். புது தில்லியிலுள்ள சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றினார். 1995-1996 ஆம் ஆண்டுகாலத்தில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் இவர் துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.[1]
அரி கௌதம் Hari Gautam | |
|---|---|
| 20வது துணைவேந்தர், பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
| பதவியில் 2 ஆகத்து 1995 – 25 ஆகத்து 1998 | |
| நியமிப்பு | சங்கர் தயாள் சர்மா |
| முன்னையவர் | தே. நா. மிசுரா |
| பின்னவர் | ஒய். சி. சிம்தாரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பணி | இதய அறுவை சிகிச்சை நிபுணர் |
| அறியப்படுவது | துணைவேந்தர்]], சிறீ இலால் பகதூர் சாசுதிரி தேசிய சமசுகிருத பல்கலைக்கழகம் |
தொழில்
அரி கௌதம் முன்னதாக கிங் சியார்ச்சு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,[2] தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவராகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராகவும்[3] (1999-2002) மற்றும் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 20 ஆவது துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ "Chancellor | Shri Lal Bahadur Shastri National Sanskrit University". www.slbsrsv.ac.in. Retrieved 2022-03-07.
- ↑ "Ex-UGC chief to head KGMU". Hindustan Times (in ஆங்கிலம்). 2006-07-08. Retrieved 2022-09-08.
- ↑ "List of Former Chairpersons". University Grants Commission.
- ↑ Staff (2006-07-07). "Dr Hari Gautam appointed KGMU VC". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2022-09-08.
- ↑ "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. Retrieved 2022-09-08.