ஈரல்லைலமீன்
ஈரல்லைலமீன் (Diallylamine) என்பது HN(CH2CH=CH2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாக காணப்படும் இச்சேர்மம் அமோனியா போன்ற காரச்சுவையைக் கொண்டுள்ளது. இரண்டாம்நிலை அமீன் மற்றும் இரண்டு ஆல்க்கீன் குழுக்களைக் கொண்டிருப்பதால் பல செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. என்,என்-ஈரல்லைல்யிருகுளோரோ அசிட்டமைடு மற்றும் என்,என்-ஈரல்லைல்யிருமெத்தில் அமோனியம் குளோரைடு தயாரிப்பில் ஈரல்லைலமீன் பயன்படுத்தப்படுகிறது.
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 124-02-7 | |
| ChEMBL | ChEMBL3186706 |
| ChemSpider | 21106561 |
| EC number | 204-671-2 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 31279 |
| வே.ந.வி.ப எண் | UC6650000 |
| |
| UNII | N18EXB6V6P |
| UN number | 2359 |
| பண்புகள் | |
| C6H11N | |
| வாய்ப்பாட்டு எடை | 97.16 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 0.7874 கி/செ.மீ3 |
| உருகுநிலை | −88 °C (−126 °F; 185 K) |
| கொதிநிலை | 111 °C (232 °F; 384 K) |
| தீங்குகள் | |
| GHS குறியீடு:[1] | |
விளக்கப்படங்கள்
|
|
குறியீட்டுச் சொல்
|
அபாயன் |
இடர் அறிக்கைகள்
|
H225, H302, H311, H314, H315, H319, H335, H412 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தயாரிப்பு
அக்ரைலோநைட்ரைலை பகுதியாக ஐதரசனேற்றம் செய்து வணிகரீதியாக ஈரல்லைலமீன் தயாரிக்கப்படுகிறது.:[2]
- 2 NCCH=CH2 + 4 H2 → HN(CH2CH=CH2)2 + NH3
கால்சியம் சயனமைடை ஈரல்லைலேற்றம் செய்து தொடர்ந்து விளைபொருளை சயனைடு நீக்க வினைக்கு உட்படுத்தி ஆய்வக அளவுகளில் ஈரல்லலைமீன் தயாரித்துக் கொள்ளப்படுகிறது.[3]
தொடர்புடைய சேர்மங்கள்
மேற்கோள்கள்
- ↑ "Diallylamine". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 2 March 2022.
- ↑ Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a02_001
- ↑ E. B. Vliet (1925). "Diallylamine". Organic Syntheses 5: 43. doi:10.15227/orgsyn.005.0043.