கோணங்காடு (Konamkadu) இந்திய நாட்டிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில், கல்குளம் வட்டத்திலுள்ள கல்லுகூட்டம் நகர ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.[1][2] நாகர்கோவில் -திங்கள்நகர்- குளச்சல் பிரதான சாலையில் உடையார்விளை சந்திப்பிலிருந்து வடமேற்கே 1 கிலோமீட்டர் தொலைவிலும் குளச்சலிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கிராமம் அமைந்துள்ளது.

கோணங்காடு

கிராமம்
கோணங்காடு is located in தமிழ்நாடு
கோணங்காடு
கோணங்காடு
ஆள்கூறுகள்: 8°10′35″N 77°23′36″E / 8.17649°N 77.3933°E / 8.17649; 77.3933
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
28 m (92 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629803
கிராமம்கல்லுக்கூட்டம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிகுளச்சல்

இக்கிராமத்தின் மையப் பகுதியில் கோணங்காடு புனித பிரான்சிசு சவேரியார் கிறித்தவத் தேவாலயம் உள்ளது. இங்கே பள்ளி முன் பருவக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை கற்பிக்கும் புனித பிரான்சிசு சவேரியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. தேவாலய வளாகத்தில் ஒரு அஞ்சலகம் அமைந்துள்ளது. கோணங்காடு கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 629803 ஆகும்.

மேற்கோள்கள்

  1. தினத்தந்தி (2021-03-26). "குமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் - கோணங்காட்டில் விஜய்வசந்த், பிரின்ஸ் வாக்குறுதி". www.dailythanthi.com. Retrieved 2025-02-08.
  2. "குளச்சல், இரணியலில் இன்று மின்தடை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2025/Feb/03/power-outage-in-kulachal-iraniyal-today. பார்த்த நாள்: 8 February 2025. 
"https://tamilar.wiki/w/index.php?title=கோணங்காடு&oldid=343923" இலிருந்து மீள்விக்கப்பட்டது