பரத்வாஜ்
பரத்வாஜ் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
| பரத்வாஜ் | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | 7 மார்ச்சு 1960[1] |
| இசை வடிவங்கள் | திரையிசை |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் |
| இசைத்துறையில் | 1998–தற்போதுவரை |
வாழ்க்கை வரலாறு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார்.[2] இவரின் தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.[2]இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர்.[2] பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
திருக்குறளுக்கு இசை
திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.[3]
பாடல்கள்
சரணுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
- 1998 காதல் மன்னன் - உன்னை பார்த்த பின்பு நான்
- 1999 அமர்க்களம் - மகாகணபதி, சத்தமில்லாத தனிமை கேட்டேன்
- 2000 பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன், கிடைக்கல கிடைக்கல
- 2002 ஜெமினி - ஓ! போடு.. ஓ! போடு
- 2003 ஜே ஜே - ஜீ பூம்பா, நீ சூரியனை சுட்டுவிடும்
- 2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் - சீனா தானா டோய்
- 2004 அட்டகாசம் - அட்டகாசம், 'தெக்கு சீமையில, தல போல வருமா
- 2009 அசல் - ஏ துஷ்யந்தா, தெட்டொடேய்ங்
மற்ற இயக்குநர்களுடன் இணைந்து இசையமைத்த குறிப்பிடத்தக்க பாடல்கள்
- அனைத்து பாடல்களும் - பாண்டவர் பூமி
- ஆப்பிள் பெண்ணே - ரோஜாக்கூட்டம்
- ஒவ்வொரு பூக்களுமே - ஆட்டோகிராப்
இசையமைத்த திரைப்படங்கள்
காதல் மன்னன் திரைப்படத்தில் அறிமுகமான பரத்வாஜ் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த அட்டகாசம் இவரது 25-வது திரைப்படமாகவும் இயக்குநர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த அசல் திரைப்படம் இவரது 50-வது திரைப்படமாகவும் அமைந்தது.[4]
| ஆண்டு | தமிழ் | மற்ற மொழிகள் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1998 | காதல் மன்னன் | முதல் திரைப்படம் | |
| பூவேலி | |||
| 1999 | அமர்க்களம் | ||
| ரோஜாவனம் | |||
| 2000 | பார்த்தேன் ரசித்தேன் | ||
| 2001 | பாண்டவர் பூமி | ||
| பெண்கள் | |||
| 2002 | ரோஜாக்கூட்டம் | ||
| ஜெமினி | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | ||
| தமிழ் | |||
| தயா | |||
| ராஜ்ஜியம் | |||
| ஜங்ஷன் | |||
| ஐ லவ் யூ டா | |||
| 2003 | ஜே ஜே | ||
| காதல் டாட் காம் | |||
| காலாட்படை | |||
| அன்பே அன்பே | |||
| 2004 | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் | ||
| ட்ரீம்ஸ் | |||
| ஜனனம் | |||
| ஒரு முறை சொல்லிவிடு | |||
| ஆட்டோகிராப் | சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ் | ||
| அட்டகாசம் | |||
| 2005 | ஐயா | ||
| பிரியசகி | |||
| குண்டக்க மண்டக்க | |||
| பிப்ரவரி 14 | |||
| 2006 | இதயத் திருடன் | ||
| திருப்பதி | |||
| ஜாம்பவான் | |||
| உள்ள கடத்தல் | |||
| மை ஆட்டோகிராப் (கன்னடம்) | |||
| திருட்டுப் பயலே | |||
| வட்டாரம் | |||
| 2007 | பள்ளிக்கூடம் | ||
| ஒன்பது ரூபாய் நோட்டு | |||
| விகாரி (தெலுங்கு) | |||
| நம்பர்.73, சாந்தி நிவசா (கன்னடம்) | |||
| முனி | |||
| 2008 | வல்லமை தாராயோ | ||
| 2009 | நாளை நமதே | ||
| சொல்ல சொல்ல இனிக்கும் | |||
| காதலுக்கு மரணமில்லை | திரைப்படம் வெளியாகவில்லை | ||
| அசல்[4] | |||
| 2010 | களவாடிய பொழுதுகள் | ||
| நந்தி | |||
| 2014 | அதிதி | ||
| அரண்மனை | |||
| அழகிய பாண்டிபுரம் | |||
| 2016 | ஆயிரத்தில் இருவர் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-30. Retrieved 2014-07-12.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Movie Buzz. "Bharadwaj". Sify.
- ↑ "திருக்குறளுக்கு இசை". http://m.dinamalar.com/cinema_detail.php?id=33622.
- ↑ 4.0 4.1 "Saran confirms Bharadwaj for Asal". By Moviebuzz. 2009. Retrieved 2009-03-29.