பௌர்ணமி பூஜை என்பது இந்து சமய கோயில்களிலும், இந்து சமயத்தினர் வீடுகளிலும் கடைபிடிக்கப்படும் விழாவாகும். [1] இப்பூசையைச் செய்தால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), மாங்கல்யம் நிலைக்கும் (கணவன் உயிருடனுடம் நலமுடனும் இருப்பான்) எனவும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில் இன்றும் நிலவுகின்ற இயற்கை வழிபாடுகளில் இந்த பௌர்ணமி பூசையும் ஒன்றாகும். இந்நாளில் சந்திரனிலிருந்து அதிகப்படியான வெளிச்சம் பூமிக்கு கிடைக்கிறது. இந்த காரணத்தினால் பௌர்ணமி நாட்களில் இரவுகளை மக்கள் கொண்டாடியுள்ளார்கள். அருகிலிருக்கும் நீர்நிலைகளின் கரைகளில் சென்று பொழுதினை கூடி ஒன்றாக கழிப்பதிலும், வீடுகளிலிருந்து வெளிவந்து மக்கள் கூடி கொண்டாடவும் இந்த வெளிச்சம் பயன்பட்டுள்ளது. பண்டைய வழிபாட்டின் நீட்சியாக இன்றும் இந்து சமயத்தினர் இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள்.

பௌர்ணமி விரதம்

பௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து உண்ணா நோம்பிருந்து, பௌர்ணமியை பூசையை முடித்த பின்பு உண்ணுதலை பௌர்ணமி விரதம் என்கிறார்கள். வருடத்திற்கு 12 நாட்கள் இவ்வாறு பௌர்ணமி விரதம் இருக்க நேரிடும்.

தமிழ்மாதங்களும் பௌர்ணமியும்

தமிழ்மாதங்கள் ஒவ்வொன்றில் பௌர்ணமி வருகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக தமிழ்மாதங்களில் வருகின்ற பௌர்ணமி சில நட்சத்திர நாட்களில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சில நேரங்களில் தவறுகிறது.

  • சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்
  • வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்
  • ஆனி மாதம் - மூல நட்சத்திரம்
  • ஆடி மாதம் - உத்திராட நட்சத்திரம்
  • ஆவணி மாதம் - அவிட்ட நட்சத்திரம்
  • புரட்டாசி மாதம் - பூரட்டாதி நட்சத்திரம்
  • ஐப்பசி மாதம் - அசுவினி நட்சத்திரம்
  • கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்
  • மார்கழி மாதம் - மிருகசீரிஷம்/ திருவாதிரை நட்சத்திரம்
  • தை மாதம் - பூச நட்சத்திரம்
  • மாசி மாதம் - மக நட்சத்திரம்
  • பங்குனி மாதம் - உத்திரம் நட்சத்திரம்

திருவிழாக்கள்

தமிழ் மாதங்கள்

வரிசை எண் தமிழ் சூரிய மாதம் ஆங்கில தேதிகள் தமிழ் மாதம் (ஆங்கிலம்) சந்திர மாதம் (சமஸ்கிருதம்) சூரிய மாதம் (இராசி) இராசி அடையாளம் முக்கிய நட்சத்திரம் சூரிய அடிப்படையிலான திருவிழாக்கள் சந்திர அடிப்படையிலான திருவிழாக்கள்
1 சித்திரை ஏப் 14 –
மே 14
Chithirai சைத்ர மேழம் (மேஷம்) வருடை (ஒரு வகை ஆடு) சித்திரை நட்சத்திரம் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருவிழா இராம நவமி, சித்திரா பௌர்ணமி
2 வைகாசி மே 15 – ஜூன் 14 Vaikasi வைசாக விடை (ரிஷபம்) காளை அல்லது ஆண் மாடு விசாகம் நட்சத்திரம் வைகாசி விசாகம் நரசிம்ம ஜெயந்தி
3 ஆனி ஜூன் 15 – ஜூலை 16 Aani ஜ்யேஷ்ட ஆடவை (மிதுனம்) இரட்டைகள் அனுசம் ஆனி திருமஞ்சனம் குரு பூர்ணிமா
4 ஆடி ஜூலை 17–
ஆக 16
Aadi ஆஷாட கடகம் நண்டு பூராடம் / உத்திராடம் ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு
5 ஆவணி ஆக 17 – செப் 16 Avani ஷ்ராவண சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சிங்கம் திருவோணம் ஆவணி அவிட்டம் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி
6 புரட்டாசி செப் 17 – அக் 17 Purattasi பத்ரபாத கன்னி கன்னிப்பெண் பூரட்டாதி / உத்திரட்டாதி புரட்டாசி சனிக்கிழமை விரதம் நவராத்திரி நோன்பு, விஜயதசமி
7 ஐப்பசி அக் 18 – நவ 16 Aippasi அஸ்வின துலை (துலாம்) இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் அச்சுவினி அன்னாபிசேகம் தீபாவளி, கந்த சஷ்டி
8 கார்த்திகை நவ 17 –
டிச 15
Karthikai கார்திக நளி (விருச்சிகம்) தேள் கிருத்திகை கார்த்திகை விளக்கீடு கார்த்திகை பூர்ணிமா
9 மார்கழி டிச 16 – ஜன 13 Margazhi மார்கஷீர்ஷ தனுசு வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை மிருகசீரிடம் வைகுண்ட ஏகாதசி திருவாதிரை நோன்பு
10 தை ஜன 14 – பிப் 12 Thai பௌஷ சுறவம் (மகரம்) ஆடு பூசம் தைப்பொங்கல் ரத சப்தமி
11 மாசி பிப் 13 –
மா 13
Masi மக குடம் (கும்பம்) ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர் மகம் மாசி மகம் மகா சிவராத்திரி
12 பங்குனி மா 14 –
ஏப் 13
Panguni பல்குண மீனம் இரு மீன்கள் உத்தரம் பங்குனி உத்திரம் ஹோலிகா தகனம்

ஆதாரங்கள்

  1. "Dinakaran - பூரண வளம் தரும் பௌர்ணமி பூஜை". Archived from the original on 2015-01-23. Retrieved 2016-07-31.
  2. "உமா மஹேசுவர விரத பூஜை". shaivam.org. Retrieved 2024-12-28.
  3. மாலை மலர் (2019-04-05). "உமா மகேசுவர விரதம்". www.maalaimalar.com. Retrieved 2024-12-28.
"https://tamilar.wiki/w/index.php?title=பௌர்ணமி_பூஜை&oldid=454463" இலிருந்து மீள்விக்கப்பட்டது