பெருந்துறை
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி மேன்மைப்படுத்துவது தமிழர்விக்கி:தொகுத்தல் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் [1] திருத்தி உதவுங்கள். |
| பெருந்துறை | |||||||
| — சிறப்பு நிலை பேரூராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°16′N 77°35′E / 11.27°N 77.58°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| பேரூராட்சி தலைவர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | பெருந்துறை
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
சி. ஜெயக்குமார் (அதிமுக) | ||||||
| மக்கள் தொகை | 16,973 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 292 மீட்டர்கள் (958 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
பெருந்துறை (ஆங்கிலம்:Perundurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
மாணிக்கவாசகரின் மாணவர்கள் சிவலிங்கம் ஸ்தாபித்து [கி.பி. 7] சைவ சமயத்தைப் பரப்பிய ஊர் கூனம் பட்டி.அதனருகில் மாணிக்கவாசகருக்கு மிகவும் உகந்த ஸ்தலமான பட்டுக்கோட்டை மாவட்டத் திருப்பெருந்துறையை நினைவு படுத்தும் வகையில் கொங்கு அரசன் உருவாகிய ஊரே நமது அருமை கொங்கு நாட்டுப் பெருந்துறை.
மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். இவன் முடிசூட்டுகின்ற காலத்தில் அரசமுடியும், கண்ணியும் காணாமல் போனதால் களங்காய்களால் ஆன கண்ணியையும், நாரால் பின்னப்பட்ட முடியையும் அணிந்து கொண்டான். ஆதலால் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் எனப்பட்டான். நார்முடிச் சேரல் பல வெற்றிகளைக் கொண்டவன் ஆவான். கடம்பின் பெருவாயில், வாகைப் பெருந்துறை என்னும் இரு இடங்களில் நடைபெற்ற போரில் வாகைப் பெருந்துறையை ஆண்டுகொண்டிருந்த நன்னன் என்ற மன்னனை வென்று, அவனிடம் தான் முன்பு இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டான்.
அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.
கோவில்
1.பெருந்துறை முனியப்பசாமி கோயில் 2. கோட்டைமாரியம்மன் கோயில் 3. சோழீஸ்வரர் கோயில் 4. மதுரைவீரன் கோயில் 5. செல்லாண்டியம்மன் கோயில்
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 34,973 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெருந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருந்துறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொழில்வளம்
இங்கு தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் தொழிற்பேட்டை ஒன்றும் அமைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா) 47 இவ்வூரின் வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன.
கல்வி
பள்ளிகள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
கல்லூரிகள்
- கொங்கு பொறியியல் கல்லூரி
- நந்தா பொறியியல் கல்லூரி
- சாலை மற்றும் போக்குவரத்து மருத்துவக் கல்லூரி, ஐ.ஆர்.டி.டி
பயிற்சி மையங்கள்
- ஜெயம் தனிப்பயிற்சி மையம்
பகுதிகள்
- பெரியமடத்துப்பாளையம், *ஆதிதிராவிடர் காலனி, *கோவை மெயின் ரோடு, *சின்னமடத்துப்பாளையம், *பழையகோட்டை *அரிஜனகாலனி,
- புதியகோட்டை அரிஜனகாலனி, *குழந்தையன்தோட்டம்,
- ராஜவீதி,
- பாவடி வீதி
- பொடிமட்டைகாரர் சந்து,
- மஜீத் வீதி, முகமதியர் தெரு
- பஜனைகோயில் தெரு 1, *பஜனைகோயில் தெரு 2, *பஜனைகோயில் தெரு 3, *முதலியார் வீதி
- குன்னத்தூர் ரோடு, *கள்ளியம்புதூர் ரோடு, *கள்ளியம்புதூர்,
- கோவை மெயின் ரோடு,
- எம் சி ரோடு கிழக்கு,
- ஆதிதிராவிடர் காலனி, *ஆதிதிராவிடர் வீதி,
- கவின் நகர், காந்தி நகர், *ஆனந்த நகர்
- தோப்புபாளையம்
- பணிக்கம்பாளையம், *பணிக்கம்பாளையங்கிழக்கு *ஆதிதிராவிடர்காலனி, *பணிக்கம்பாளையம்மேற்கு *ஆதிதிராவிடர்காலனி, *முள்வாடியூர்,
- காட்டூர், *அரசங்குட்டைத்தோட்டம், *தாளக்கரைபுதூர், *சின்னவேட்டுவபாளையம்,
- சென்னிவலசு
- பெரியவேட்டுவபாளையம், *குமரன்தெரு, *பெரியவேட்டுவபாளையம்
- நாடார் வீதி, *பெரியவேட்டுவபாளையம் *ஆதிதிராவிடர் காலனி
- குட்டைக்காடு,
- கடப்பமடை, *அலிச்சாகவுண்டன்புதூர், *கருக்கன்காட்டூர், *ஓலப்பாளையம், *கந்தம்பாளையம்.
சான்றுகள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)