ஆடுதுறை - 51
ஆடுதுறை - 51 அல்லது ஏடிடீ - 51 (ADT 51), சுட்டுப் பெயர்: (AD 09367), முன்மொழிவு எண்: (IET 23617) எனப்படும் இந்த நெல் வகை, BPT 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் இரகங்களின் வழித்தோன்றலாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
| ஆடுதுறை - 51 ADT 51 |
|---|
| வேளாண் பெயர் |
| ADT 51 (AD 09367) (IET 23617) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| BPT 5204 x வெள்ளைப் பொன்னி[1] |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 155 - 160 நாட்கள்[1] |
| மகசூல் |
| 6533 கிலோ எக்டேர்[2] |
| வெளியீடு |
| 2017[3] |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை[3] |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
வெளியீடு
தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 51 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]
காலம்
மத்திய மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 155 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகவும், விதைப்புப் பருவதிற்கு ஆகத்து முதல் செப்டம்பர் வரையிலான சம்பாப் பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது.[2]
சாகுபடி
தமிழகத்தின் காவிரி கழிமுகப் பகுதியில் ஒற்றைப் பருவ கால்வாய் சார்ந்த நெல் வளரும் பகுதிகளுக்கு நன்கு பொருந்தக்கூடியதாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]
மகசூல்
CR 1009 நெல் இரக்கத்தை ஒத்த சமையல் குணங்கள் உள்ளதாக கூறப்படும் இந்நெல் வகை,[2] ஒரு எக்டேருக்கு சுமார் 6533 கிலோவாக பதிவு செய்துள்ளது. இது CR 1009 (5947 கிலோ/எக்டேர்) மற்றும் ADT 50 (5796 கிலோ/எக்டேர்) ஐ விட முறையே 9.8 மற்றும் 12.7 சதவீதம் அதிகமாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவிசநல்லூரில் இது 10036 கிலோ/எக்டேர் என்ற அதிகபட்ச மகசூலை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.[2]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Season and Varieties: Rice ADT 51". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-26.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Rice ADT 51 - A high yielding long duration rice variety suitable for Samba season in Cauvery Delta Zone of Tamil Nadu". www.ejplantbreeding.org (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-26.
- ↑ 3.0 3.1 3.2 "Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - © 2019. Retrieved 2025-06-26.