எஸ். ஹரீஷ்
எஸ். ஹரீஷ் (S. Hareesh, பிறப்பு 15 மே 1975) என்பவர் ஒரு மலையாள எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், மலையாளத் திரைப்பட திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் தனது சிறுகதைகளுக்காகவும், 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியின் கேரளத்தின் சாதியை ஆராயும் பாராட்டப்பட்ட, சர்ச்சைக்குரிய இவரது முதல் புதினமான மீசவிற்காக மிகவும் பிரபலமானார்.[1] முதலில் மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளிவந்த இந்தப் புதினம், "இந்து பெண்களையும், கோயில் பூசாரிகளையும் இழிவுபடுத்துவதாக" வலதுசாரி இந்துத்துவக் குழுக்கள், சாதி-சமூக அமைப்புகளின் எதிர்ப்புகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. [2] பின்னர் இது டி.சி. புக்ஸ் பதிப்பகத்தால் முழுமையான புதினமாக வெளியிடப்பட்டது. [2] ஹரீஷ் புதினத்துக்கான கேரள சாகித்ய அகாதமி விருது மற்றும் கேரள சாகித்ய அகாதமியின் கீதா இரண்யன் அறக்கட்டளை விருது உள்ளிட்ட பல கௌரவங்களைப் பெற்றுள்ளார். மீச புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான, மஸ்டஸ் என்ற நூல் 2020 நவம்பரில், மிக உயர்ந்த பரிசுத் தொகையுடன் கூடிய இந்திய இலக்கிய விருதான ஜேசிபி இலக்கிய பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[3] [4]
| இயற்பெயர் | எஸ். ஹரீஷ் |
|---|---|
| பிறந்ததிகதி | 15 மே 1975 |
| பிறந்தஇடம் | நீந்தூர், கோட்டயம், கேரளம், இந்தியா |
| பணி | எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர் |
| தேசியம் | இந்தியர் |
| வகை | புதினம், சிறுகதை, மொழிபெயர்ப்புகள், திரைப்படங்கள் |
| செயற்பட்ட ஆண்டுகள் | 1995–தற்போது |
| செயற்பட்ட ஆண்டுகள் | 1995–தற்போது |
| குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
வாழ்க்கை வரலாறு
எஸ். ஹரீஷ் தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நீண்டூரில் 1975 மே 15 அன்று பிறந்தார். [5] [6]
ஹரீஷ் தனது முதல் புத்தகமான ரசவித்யாயுதே சரித்திரம் ('ரசவாதத்தின் வரலாறு') என்ற சிறுகதைத் தொகுப்பை 2005 இல் வெளியிட்டார், அது இவருக்கு கேரள சாகித்ய அகாதமியின் கீத இரண்யன் அறக்கட்டளை விருதைப் பெற்றுத் தந்தது.[2] அதைத் தொடர்ந்து ராண்டி பௌஷ் எழுதிய தி லாஸ்ட் லெக்சர் என்ற புதினத்தின் மலையாள மொழிபெயர்ப்பு 2012 இல் டிசி புக்ஸ் வெளியிட்டது. [7] நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ஆடம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது 2016 ஆம் ஆண்டு கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது. [8] [9] 2018 ஆம் ஆண்டில், இவரது முதல் புதினமான மீச, மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டது, ஆனால் இந்து வலதுசாரி குழுக்களின் அழுத்தங்கள் காரணமாக அந்தத் தொடர் நிறுத்தப்பட்டது.[10] பின்னர், அந்தப் புதினம் டி.சி. புக்ஸ் நிறுவனத்தால் முழுமையாக வெளியிடப்பட்டது.[11] அதே ஆண்டு, இவர் அப்பன் என்ற மற்றொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். [12] மீசவை கிராஸ்வேர்டு விருது பெற்றவரான ஜெயஸ்ரீ கலத்தி என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டது. இந்த மொழிபெயர்ப்பு புத்தகம் 2020 ஆம் ஆண்டில் ஹார்பர் பெரென்னியல் இந்தியாவால் மஸ்டஸ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. [13]
2018 ஆம் ஆண்டு வெளியான ஏடன் திரைப்படம் ஹரீஷின் சிறுகதைத் தொகுப்பான ஆடமில் உள்ள மூன்று கதைகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. [14] இந்தத் தொகுப்பிலிருந்து மாவோயிஸ்ட் கதையைத் தழுவி லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது ஜல்லிக்கட்டு என்ற படத்தை எடுத்தார்.[2] இந்தப் படம் 2020 அகாதமி விருதுகளில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ படமாகப் பட்டியலிடப்பட்டது.[15] [16]
இவர் கோட்டயத்தில் உள்ள கைப்புழாவில் கிராம உதவியாளராகப் பணிபுரிகிறார்.[2]
விருதுகளும் அங்கீகாரங்களும்
2008 ஆம் ஆண்டு ஹரீஷ் தனது சிறுகதைத் தொகுப்பான ரசவித்யாயுதே சரித்திரத்திற்காக கேரளச் சாகித்திய அகாதமியால் கீதா இரண்யம் அறக்கட்டளை விருதைப் பெற்றார். [17] அடுத்த ஆண்டு, சிறுகதைக்கான தாமஸ் முண்டசேரி விருதைப் பெற்றார். [18] 2018 ஆம் ஆண்டில் தனது "ஆடம்" என்ற சிறுகதை தொகுப்பிற்காக சிறந்த கதை எழுத்தாளருக்கான கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். [19] 2020 ஆம் ஆண்டில் வி.பி. சிவகுமார் நினைவு கேளி விருதையும் [20] நந்தனார் விருதையும் பெற்றார். [21] [22] இவரது சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இவரால் திரைக்கதை எழுதப்பட்ட ஏடன் திரைப்படம் 2017 ஆம் ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான (தழுவல்) அரசு திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. [23]
2020 ஆம் ஆண்டில் , மீசவின் ஆங்கில மொழிபெயர்ப்பு, "மஸ்டஸ்" என்ற தலைப்பில், இலக்கியத்திற்கான ஜே.சி.பி. பரிசைப் பெற்றது. [3] இந்த புதினம் 2021 இல் அறிவிக்கப்பட்ட 2019 பெப்ரவரியில் கேரள சாகித்ய அகாடமி புதினத்துக்கான விருதைப் மற்றொரு விருதைப் பெற்றது. [24]
நூல் பட்டியல்
சிறுகதை தொகுப்புகள்
- ராசவித்யாயுதே சரித்திரம். Current Books. 2005.[25]
- ஆடம். DC Books. 2016.
- அப்பன். DC Books. 2018. p. 130. ISBN 978-8-126-47733-3.
- மீச. DC Books. 2018. p. 328. ISBN 978-8-126-47737-1.
- ஆகஸ்ட்டு 17. DC Books. 2022. p. 368. ISBN 978-9-354-82575-0.
- பட்டுநூல் புழு. DC Books. 2024. p. 290. ISBN 978-9-364-87667-4.
மொழிபெயர்ப்புகள்
- ராண்டி பௌஷ்; Jeffrey Zaslow. The Last Lecture [Anthyaprabhashanam] (in மலையாளம்). Translated by S. Hareesh. DC Books. p. 212. ISBN 978-8-126-42672-0.
ஆங்கிலத்தில் கிடைக்கும் படைப்புகள்
- S. Hareesh (2020). Moustache. Translated by Jayasree Kalathil. Harper Perennial India. p. 360. ISBN 978-9-353-57602-8.
திரைப்படவியல்
| ஆண்டு | தலைப்பு | திரைக்கதை | கதை | உரையாடல்கள் | இயக்குநர் |
|---|---|---|---|---|---|
| 2018 | ஏடன் | ஆம் | ஆம் | ஆம் | சஞ்சு சுரேந்திரன் |
| 2019 | ஜல்லிக்கட்டு | ஆம் | ஆம் | ஆம் | லிஜோ ஜோஸ் பெல்லிசேரி |
| 2021 | சுருளி | ஆம் | இல்லை | ஆம் | லிஜோ ஜோஸ் பெல்லிசேரி |
| 2023 | நண்பகல் நேரத்து மயக்கம் | ஆம் | இல்லை | ஆம் | லிஜோ ஜோஸ் பெல்லிசேரி |
| 2024 | தெக்கு வடக்கு | ஆம் | இல்லை | ஆம் | பிரேம் ஷங்கர் |
மேற்கோள்கள்
- ↑ "I drew on the stories I have been hearing from childhood to write 'Meesha', says author S Hareesh". https://www.thehindu.com/books/books-authors/s-hareesh-on-his-first-novel-meesha-which-is-getting-translated-into-english-as-moustache/article30633087.ece.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Who is S. Hareesh?". https://www.thehindu.com/books/books-authors/who-is-s-hareesh/article24603467.ece.
- ↑ 3.0 3.1 "എസ്. ഹരീഷിന്റെ മീശ നോവലിന് ജെ.സി.ബി സാഹിത്യ പുരക്സാരം".
- ↑ "Malayalam author S Hareesh wins the JCB Prize for Literature 2020". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-07. Retrieved 2020-11-12.
- ↑ Mathrubhumi International Festival of Letters (23 January 2018). "S Hareesh". Mathrubhumi. Retrieved 7 August 2019.
- ↑ "Who is S Hareesh? IE". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-06. Retrieved 2018-11-13.
- ↑ "Anthya Prabhashanam (The Last Lecture)". www.indulekha.com. Retrieved 2020-09-20.
- ↑ "Who is S Hareesh?". The Indian Express (in ஆங்கிலம்). 2018-08-06. Retrieved 2020-11-13.
- ↑ "Aadam". www.goodreads.com. Retrieved 2020-09-20.
- ↑ "Kerala Gets Its Own Perumal Murugan, Thanks (Again) to the Sangh Parivar". The Wire. Retrieved 2020-12-19.
- ↑ "Meesha". www.goodreads.com. Retrieved 2020-09-20.
- ↑ "Appan". www.goodreads.com. Retrieved 2020-09-20.
- ↑ "S Hareesh's Moustache is a diligently told story of a troubled yet awe-inspiring land". Firstpost. Retrieved 2020-09-20.
- ↑ "Aedan: Garden of Desire (2018) - IMDb". ஐ. எம். டி. பி இணையத்தளம். Retrieved 2020-09-20.
- ↑ K., Janani (November 26, 2020). "Why Lijo Jose's Jallikattu deserves to be India's Oscars 2021 entry: An overview". India Today (in ஆங்கிலம்). Retrieved 2020-12-15.
- ↑ "Malayalam film Jallikattu is India's entry for 2021 Oscars". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-27. Retrieved 2020-12-15.
- ↑ "Kerala Sahitya Akademi Awards" (PDF). Kerala Sahitya Akademi. 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ "S Hareesh- Speaker in Kerala literature Festival KLF –2019". keralaliteraturefestival.com. 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ Staff Reporter (2018-02-22). "Sahithya Akademi awards announced". The Hindu (in Indian English). Retrieved 2018-03-01.
- ↑ "S. Hareesh - Veethi profile". veethi.com. 2019-03-23. Retrieved 2019-03-23.
- ↑ "'മീശ' നോവലിന് അംഗീകാരം; എസ് ഹരീഷിന് നന്തനാര് പുരസ്കാരം". Reporter Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-20. Retrieved 2020-10-20.
- ↑ www.dcbooks.com (2020-10-20). "നന്തനാര് സാഹിത്യപുരസ്കാരം എസ് ഹരീഷിന്". DC Books (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2020-10-20.
- ↑ "Kerala State Film Awards: Debut films steal the show - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-09-20.
- ↑ "kerala sahithya academy award announced കേരള സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരങ്ങൾ പ്രഖ്യാപിച്ചു; എസ്. ഹരീഷിന്റെ 'മീശ' മികച്ച നോവൽ". www.twentyfournews.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-15. Retrieved 2021-02-15.
- ↑ Hareesh, S. (2005). "Rasavidhyayude charithram". Current books. Retrieved 2018-11-13.