கொழுமம்

2409:4072:6e1a:8c75:1183:3ce3:1ebb:5f23 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 01:46, 1 ஏப்பிரல் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (நிர்வாக அலகு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கொழுமம் (ஆங்கிலம்:KOLUMAM-(KOZHUMAM)) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிற்றூர்.[4][5] இந்தச் சிற்றூர் மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமமான சங்கரராமநல்லூர் -கிழக்கு (கிராம எண்:37) இன் உட்கடை ஊர் ஆகும்.

கொழுமம்
—  கிராமம்  —
கொழுமம்
அமைவிடம்: கொழுமம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°28′56″N 77°21′45″E / 10.482242°N 77.362504°E / 10.482242; 77.362504
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெயர் சிறப்பு

கொங்கு நாட்டில் வாழ்ந்த வள்ளல்களில் குமணவள்ளல் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவ்வூர் குழுவூர் என அழைக்கப்பட்டதாக இங்குள்ள கரிய வரதராஜபெருமாள் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.[6]

அமைவிடம்

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பழனியிலிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்திலும், உடுமலைப்பேட்டையிலில் இருந்து 18 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 405 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் ஐவர்மலை சமணர் குகைகள் அமைந்துள்ளது.

முக்கிய பயிர்

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), கரும்பு, வாழை அதிகமாக விளைகின்றன. இது அமராவதியாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான நிலப்பகுதியாகும்.


மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமம் கிராமத்தில் 681 வீடுகள் உள்ளது. இவ்வூரில் 2654 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 1339,பெண்கள்1315 பாலின விகிதம் 982. எழுத்தறிவு பெற்றவர்கள் 1420 பேர். இதில் 829 பேர் ஆண்கள்; 591 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 61.08%. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 329 ஆண் குழந்தைகள் 174,பெண் குழந்தைகள் 155 ஆவர்.[7]

நிர்வாக அலகு

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-01-04.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-01-04.
  6. கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007-
  7. "Rural - Coimbatore District;Udumalpet Taluk;Kolumam Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. Retrieved 2014-01-02.
"https://tamilar.wiki/w/index.php?title=கொழுமம்&oldid=343034" இலிருந்து மீள்விக்கப்பட்டது