மடத்துக்குளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மடத்துக்குளம் பேரூராட்சி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் மடத்துக்குளம் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி மடத்துக்குளம்

-

சட்டமன்ற உறுப்பினர்

சி. மகேந்திரன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

20,620 (2011)

2,175/km2 (5,633/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.48 சதுர கிலோமீட்டர்கள் (3.66 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/madathukulam


மடத்துக்குளம் (ஆங்கிலம்: Madathukulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மடத்துக்குளம் வட்டம் மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். முன்னர் மடத்துக்குளம் நகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

மடத்துக்குளம் வட்டம், 01.01.2010 அன்று, உடுமலைப்பேட்டை வட்டத்தின், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைக் கொண்டு புதிய வருவாய் வட்டமாகப் பிரிக்கப்பட்டது. இங்கு முக்கியமான தொழிலாக விவசாயம் உள்ளது. இது அமராவதி ஆறு மூலம் பாசனம் நடைபெறும் பகுதி ஆகும். இந்த அமராவதி ஆறு அமராவதி அணைக்கட்டிலிருந்து உருவாகி மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு மற்றும் கடத்தூர் வழியாக தாராபுரம் செல்கிறது.

அமைவிடம்

மடத்துக்குளம்பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 74 கி.மீ.; உடுமலைப்பேட்டை 13 கி.மீ.; பழநி 26 கி.மீ.; கொமாரலிங்கம் 7 கி.மீ.; தாராபுரம் 31கி.மீ.; கணியூர் 7 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

9.48 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 100 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 5,761 வீடுகளும், 20,620 மக்கள்தொகையும் கொண்டது.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228811-pollachi-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025. 
  5. மடத்துக்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  6. Madathukulam Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=மடத்துக்குளம்&oldid=457031" இலிருந்து மீள்விக்கப்பட்டது