பிரதீபன்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 03:43, 13 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பிரதீபன் (Pratipa), பரத கண்டத்தின் சந்திர குலத்தைத் சேர்ந்த குரு நாட்டின் மன்னரும், சந்தனுவின் தந்தையும், பீஷ்மரின் தந்தை வழி பாட்டனும்[1], சித்திராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் ஆகியோரின் முப்பாட்டனும் ஆவார். மன்னர் பிரதீபன் குறித்த செய்திகள் மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது.

பிரதீபன்
குழந்தைகள்தேவாபி, சந்தனு, பாக்லீகர்
நூல்கள்மகாபாரதம்
அரசமரபுசந்திர குலம்

கங்கா தேவியுடன் சந்திப்பு

ஒரு முறை மன்னர் பிரதீபன் கங்கை ஆற்றின் கரையில் அமர்ந்து சூரியனை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்த போது, பிரம்மனின் சாபம் பெற்ற கங்கா தேவி பூவுலகில் வந்து பிரதீபனின் வலது தொடையில் அமர்ந்தாள். இதனால் தியானம் கலைந்த பிரதீபனிடம், கங்கா தேவி தன்னை மணக்க வேண்டினாள். வலது தொடையில் மகள் அல்லது மருமகள் அமர வேண்டிய இடம் என்பதால், பிரதீபன் கங்கையை மணக்க மறுக்கிறார்.. எனினும் தான் ஒரு ஆண் மகனை பெற்றால், அவனை மணக்கும்படி, கங்கா தேவியைக் கேட்டுக்கொள்கிறார்.[2] பின்னர் பிரதீபன் திருமணம் செய்து கொண்டு சந்தனு, தேவாபி[3] மற்றும் பாக்லீகர் எனும் மூன்று மகன்களைப் பெற்றெடுக்கிறார். இதில் சந்தனு என்பவரை பின்னர் கங்கா தேவி திருமணம் செய்து கொண்டு பீஷ்மரைப் பெற்றெடுத்து வளர்க்கிறார்[4][5].

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Monier Williams Sanskrit-English Dictionary (Oxford, 1899), p. 674.1
  2. பிரதீபன்
  3. Devapi
  4. www.wisdomlib.org (2019-01-28). "Story of Gaṅgā". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-12-18.
  5. Mbhr. 1.92
"https://tamilar.wiki/w/index.php?title=பிரதீபன்&oldid=437085" இலிருந்து மீள்விக்கப்பட்டது