பேக்

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 12:23, 12 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பேக் (Phek), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள பேக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு கிழக்கில் 123 கிலோமீட்டர் தொலைவில், கிழக்கு இமயமலைத் தொடரில் 1,524 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பேக்

மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் பேக் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°40′00″N 94°30′00″E / 25.6667°N 94.5000°E / 25.6667; 94.5000
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்பேக் மாவட்டம்
ஏற்றம்
1,524 m (5,000 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,204
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம்
 • வட்டார மொழிசோக்கிரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
797108
தொலைபேசி குறியீடு03865
வாகனப் பதிவுNL.80.94 மற்றும் NL-08
இணையதளம்https://phek.nic.in/

கல்வி

  • பேக் அரசுக் கல்லூரி
  • கிறிஸ்தவ மிஷின் மேனிலைப் பள்ளி
  • பேக் அரசு மேனிலைப் பள்ளி

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11 வார்டுகளும், 2,874 குடியிருப்புகள் கொண்ட பேக் நகரத்தின் மக்கள் தொகை 14,204 ஆகும். அதில் 7,975 ஆண்கள் மற்றும் 6,229 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.48% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 781 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.08% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 82.84%, ஆக உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் , இந்து சமயத்தினர் 13.41%, இசுலாமியர் 1.17%, கிறித்தவர்கள் 84.88% மற்றும் பிற சமயத்தினர் 0.53% வீதம் உள்ளனர்[1].

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேக்&oldid=450146" இலிருந்து மீள்விக்கப்பட்டது