மங்கொம்பு - 25

imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 13:34, 10 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மங்கொம்பு - 25 (KAU Punya (MO 25), சுட்டுப்பெயர்: (KAUM 192-1-1-1-2-1), முன்மொழிவு எண்: (IET 27315) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும். கேரளாவின் மிகவும் பிரபலமான இரண்டு நெல் வகைகளான மங்கொம்பு - 16 (உமா) மற்றும் கேரளாவின் பாரம்பரிய நெல் வகையான பட்டாம்பி - 39 (ஜோதி) ஆகியவற்றுக்கு இடையேயான கலப்பினத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்த நெல் இரகத்தை, கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் நெல் ஆய்வு நிலையம், மார்ச்சு 1, 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, புண்யா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

மங்கொம்பு - 25
MO 24 - Punya
வேளாண் பெயர்
புண்யா (KAU Punya)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 16 X பட்டாம்பி - 39
வகை
புதிய நெல் வகை
காலம்
105-110 நாட்கள்
மகசூல்
எக்டேருக்கு 5,000 - 5,500 கிலோ
வெளியீடு
2025
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

குறுகிய கால அளவில் அறுவடை செய்ய, 105 – 110 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, நீண்ட மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மிதமான மகசூல் தரக்கூடிய இந்த நெல் இரகம், சராசரியாக ஒரு எக்டேருக்கு சுமார் 5,000 முதல், 5,500 கிலோ வரை கூல மகசூல் தருவதாக கூறப்படுகிறது. இந்த வகை விதை உறக்கநிலையை சுமார் இரண்டு வாரங்கள் கொண்டுள்ளது. தண்டு துளைப்பான், உறை கருகல் மற்றும் பழுப்பு புள்ளி போன்ற முக்கிய பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு மிதமான சகிப்புத்தன்மை கொண்டது. இதன் தாய் வகைகளான ஜோதி மற்றும் உமாவை விட சிறந்தது என கூறப்படுகிறது. புண்யா எனப்படும் (மங்கொம்பு - 25), கேரள அரசின் 29வது மாநில விதை துணைக்குழு கூட்டத்தால் வெளியிடப்பட்டது, மேலும் இது குட்டநாட்டின் வேளாண் சூழலியல் பிரிவு 4 இல் சாகுபடிக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 "KAU Punya (MO 25): A High Yielding Red Kernelled Rice Variety for Kuttanad". sarr.co.in (ஆங்கிலம்) - Volume 18-(1), 2025. Retrieved 2025-09-09.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_25&oldid=456453" இலிருந்து மீள்விக்கப்பட்டது