வைஜெயந்தி

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 03:40, 19 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வைஜெயந்தி (Vaijayanti, சங்கதம்: वैजयन्ति, romanized: Vaijayantī, lit.'garland of victory' ) [1] என்பது தொன்மங்களில் கூறப்படும் ஒரு மாலை ஆகும். இது முதன்மையாக விஷ்ணுவுடன் தொடர்புடையது. [2] வழிபாட்டில் மாலையாகப் பயன்படுத்தப்படும் இந்தப் பொருள் வைஜெயந்திமாலை அல்லது வனமாலை என்றும் அழைக்கப்படுகிறது. [3] [4]

வைஜெயந்தி, கருநாடகத்தில்

இலக்கியம்

மகாபாரதத்தில் விஷ்ணு மீது பாடப்பட்ட தோத்திரமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வனமாலை (வன மலர்கள்) என வைஜயந்தி குறிப்பிடுவதைக் காணலாம்: [5]   வெற்றி மாலையானது, எப்போதும் வாடாத தாமரை மலர்களால் ஆனது என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கந்த புராணத்தில் இலக்குமிக்கு திருமணப் பரிசாக வருணன் மாலையை வழங்குகிறான். [6]

இந்த மாலையில் முதன்மையாக மரகதம், நீலக்கல், மாணிக்கம், முத்து, வைரம் ஆகிய விலையுயர்ந்த ஐந்து கற்கள் பதிக்கப்பட்டுள்ளன என்று விஷ்ணு புராணத்தில் கூறப்படுள்ளது. அவை முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என அழைக்கப்படும் ஐந்து உன்னதமான கூறுகளுடன் ஒத்துப்போகின்றன. [5] [7]

அசுரன் தாரகனை எதிர்த்து போருக்கு செல்லும் தன் மருமகன் முருகனுக்கு தனது மாலையை விஷ்ணு வழங்கினார் என்று சிவமகாபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [8]

கருட புராணத்தில் விஷ்ணு பஞ்சாரம் என்று அழைக்கப்படும் ஒரு பிரார்த்தனை உள்ளது. அதில் பின்வரும் வசனம் உள்ளது: "வைஜயந்தியையும் ஸ்ரீவத்சத்தையும் உமது கழுத்தில் அலங்காரமாக அணிந்து கொண்டு, வடமேற்கில் என்னைக் பாதுகாப்பாயாக, ஓ கடவுளே, ஓ ஹயக்ரீவா நான் உன்னை வணங்குகிறேன்". [9]

ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீவைணவ மரபில், தொண்டரடிப்பொடியாழ்வார் வனமாலையின் அம்சமாகக் கருதப்படுகிறார். [10]

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. D Dennis Hudson (27 August 2008). The Body of God Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram: An Emperor's Palace for Krishna in Eighth-Century Kanchipuram. Oxford University Press. pp. 168–. ISBN 978-0-19-970902-1.
  2. www.wisdomlib.org (2016-04-25). "Vaijayanti, Vaijayantī, Vaijayamti: 19 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-03.
  3. Prof. Shrikant Prasoon (17 February 2014). Hinduism Clarified and Simplified. V&S Publishers. pp. 235–. ISBN 978-93-81384-72-5.
  4. Rūpagosvāmī (2003). The Bhaktirasāmṛtasindhu of Rūpa Gosvāmin. Motilal Banarsidass. pp. 575–. ISBN 978-81-208-1861-3.
  5. 5.0 5.1 V. Ravi (30 November 2012). Vishnu Sahasranama. MANBLUNDER. p. 248. GGKEY:DRA5CW5BDZX.
  6. www.wisdomlib.org (2020-03-05). "The Marriage Festival of Lakṣmī and Nārāyaṇa [Chapter 14]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-03.
  7. www.wisdomlib.org (2014-08-30). "Dominion over different provinces of creation assigned to different beings [Chapter XXII]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-03.
  8. www.wisdomlib.org (2018-10-14). "Kārttikeya is crowned [Chapter 5]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-03.
  9. www.wisdomlib.org (2015-04-12). "The prayer of Vishnu Panjaram [Chapter XIII]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-08-03.
  10. Dalal, Roshen (2014-04-18). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin UK. p. 160. ISBN 978-81-8475-277-9.
"https://tamilar.wiki/w/index.php?title=வைஜெயந்தி&oldid=504770" இலிருந்து மீள்விக்கப்பட்டது