இ. தியாகலிங்கம்

Admin (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:03, 29 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்

இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

Thiagalingm.jpg

வாழ்க்கைச் சுருக்கம்

தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார்.

படைப்புகள்

  • அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம்
  • நாளை (1999) – புதினம்[1]
  • பரதேசி (2008) – புதினம்
  • வரம் (2009) – குறுநாவல் தொகுதி
  • துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி
  • திரிபு (2010) – புதினம்[2]
  • எங்கே (2011) – புதினம்[3]
  • ஒரு துளி நிழல் (2014) - புதினம்
  • பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம்[4]
  • மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம்[5]
  • சர்வ உரூபிகரம் (2016) – புதினம்
  • அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம்
  • வப்பு நாய் (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
  • துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம்
  • காமமே காதலாகி (2016) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம்
  • மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம்
  • புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
  • நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு
  • இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி
  • மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
  • கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
  • உறைவி (2022) – புதினம்
  • ஒப்புரவு (2022) – புதினம்
  • பேடும் மிதிக்கும் (2023) -- புதினம்

பிற மொழிகளில்

நோர்வே மொழியில்

  • MENNESKEHETEN FALLER - Romanen, ISBN:979-8734658864
  • I MORGEN - Romanen, ISBN:979-8745895258
  • Allestedsnærværende - Romanen, ISBN:979-8735200659
  • Avhopper? - Romanen, ISBN:979-8734189160

ஆங்கிலத்தில்

  • Humanity is falling - Novel, ISBN:979-8733094632
  • Tomorrow - Novel, ISBN:979-8733623474
  • Omnipresent - Novel, ISBN:979-8737969943
  • Deserter? - Novel, ISBN:979-8739676320

விருதுகள்

செந்தமிழ் செல்லும் வழியெது பார்- கவிதை - இலங்கைத் தமிழ்ச் சங்கம் - விக்டோரியா, முத்தமிழ் விழா, 1993.05.23 அன்று பரிசு பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  1. நாளை, நூலகம் திட்டம், பார்த்த நாள் 22 சூலை 2019.
  2. "திரிபு". கூகுல் புக்ஸ். Retrieved 18 சூலை 2019.
  3. எங்கே பார்த்த நாள் 22 சூலை 2019
  4. பாராரிக்கூத்துக்கள் பார்த்த நாள் 22 சூலை 2019.
  5. மானிடம் வீழ்ந்ததம்மா, க._பூரணச்சந்திரன், மே 19, 2015, பார்த்த நாள் 22 சூலை 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=இ._தியாகலிங்கம்&oldid=79185" இலிருந்து மீள்விக்கப்பட்டது