இ. தியாகலிங்கம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இ. தியாகலிங்கம்
பிறப்புதியாகலிங்கம்
இரத்தினம்

1967
காரைநகர்
இலங்கை,
தேசியம்நோர்வேஜியர்
மற்ற பெயர்கள்காரைநகரான்,
காரையூரான்
கல்விOslo University
college,Holtet
videregående skole
Den Polytekniske
Høyskolen,
யா/யாழ்ற்றன்
கல்லூரி,
காரைநகர் இந்துக்
கல்லூரி
பணிகணினி
பொறியியலாளர்
பணியகம்Oslo
universitets­sykehus
அறியப்படுவதுபுதின எழுத்தாளர், எழுத்தாளர்
பெற்றோர்வேலுப்பிள்ளை
இரத்தினம்,
இரத்தினம்
பரமேஸ்வரி
சிறப்புப் பணிகள்ஆரம்பக்கால
புலம்பெயர்ந்த
எழுத்தாளர்
, நாவலாசிரியர்,
தமிழர்விக்கி
நிறுவனர்
வகைசிறுகதை
புதினம்
குறுநாவல்
கவிதை
வலைத்தளம்
[karai
nagaran.com
]
[Youtube]
[lokalhistoriewiki]
ரோமாபுரியில் தியாகலிங்கம்
ரோமாபுரியில் தியாகலிங்கம்
இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம் அமரர் ச. பொன்னுத்துரை உடன் அமரர் பிரபஞ்சன்

இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளரும், தமிழர்விக்கி [1]நிறுவனருமாவார். இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.[2] அத்தோடு இ. தியாகலிங்கம் பற்றி அமரர் எழுத்தாளர் ச. பொன்னுத்துரை கூறுவது...

வாழ்க்கைச் சுருக்கம்

தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்று, தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். அங்கு இருக்கும்போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமானவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.

இறுதியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றியவர், அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில், அந்த இயக்கத்தைத் துறந்து, தனது வழியில் புறப்பட்டுச் சென்னையில் வந்து தங்கினார். அப்படியும் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால் அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்குச் சென்றார். பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார்.

இலக்கியப் பணி

இவரது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும், நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. பின்னர் கணையாழி, இருக்கிறம் போன்ற சஞ்சிகைகளிலும் கீற்று இணையத்திலும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது முக்கிய படைப்புக்களாக நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் உள்ளன.


அமார் பொன்னுத்துரையுடன் நட்பு கொண்டிருந்த இவர், மித்ர பதிப்பகத்தின் ஊடாக தனது முதல் ஒன்பது படைப்புகளை வெளியிட்டார். பின்பு சுய வெளியீடாகத் தனது படைப்புகளை வெளியிட்டுவரும் இவர், சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காகப், பாரம்பரிய முறையில் புத்தகங்களை வெளியிட்டு இயற்கையை அழிப்பதற்கு தானும் ஊக்கப்படுத்தாது இருப்பதற்காக மின் புத்தகங்களையும், வாங்கியபின் அச்சாகும் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

"யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம்" என்று அமரர் திரு ச. பொன்னுத்துரையால் விதந்துரைக்கப்பட்டவர்.

தமிழர்விக்கி உருவாக்கம்

சில கருத்து முரண்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகளை அடுத்து, தமிழர்விக்கியை[3] இ. தியாகலிங்கம் 2023 ஆம் ஆண்டு துவங்கினார். இது பக்கச்சார்பு அற்றதாக இருப்பதோடு, தகுதி வாய்ந்த கட்டுரைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்யும். அதற்கான முயற்சியில் அவர் தொடர்ந்து உறுதியாக உழைத்து வருகிறார்.

படைப்புகள் (தமிழில்)

  1. அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம் - மூன்றாம் பதிப்பு பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781105401596
  2. நாளை (1999) – புதினம் - இரண்டாம் பதிப்பு - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781008939905[4]
  3. பரதேசி (2008) – புதினம் - இரண்டாம் பதிப்பு - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781794846340
  4. வரம் (2009) – குறுநாவல் தொகுதி - இரண்டாம் பதிப்பு - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781471726569
  5. துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89748-79-1
  6. திரிபு (2010) – புதினம் - இரண்டாம் பதிப்பு - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781471730221[5]
  7. எங்கே (2011) – புதினம் - இரண்டாம் பதிப்பு - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781447768883[6]
  8. ஒரு துளி நிழல் (2014) - புதினம் - ISBN 987-93-81322-22-2 [7]
  9. பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-813-22-27-7 [8] [9]
  10. மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-329-02347-5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-329-02337-6 [10]
  11. சர்வ உரூபிகரம் (2016) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-326-64799-5
  12. அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-6018-4
  13. வப்பு நாய் (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5691-0
  14. துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5683-5
  15. காமமே காதலாகி (2016) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5681-1
  16. மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5674-3
  17. மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5675-0
  18. மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5671-2
  19. மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-6671-5676-7
  20. புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-244-44689-5
  21. நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-244-18248-9
  22. இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-244-54705-9
  23. மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-244-27384-2
  24. கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-105-02733-8
  25. உறைவி (2022) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4583-6440-1
  26. ஒப்புரவு (2022) – புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4710-4831-9
  27. பேடும் மிதிக்கும் (2023) — புதினம் - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4477-7948-3
  28. ஏழ்மை விலங்கு (2023) — புதினம், - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4466-6917-4
  29. வே (2024) — புதினம், - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8-8941-5161-8
  30. துவதி (2025) — புதினம், - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-326-10375-0
  31. விகாரம் (2025) — சிறுகதை தொகுதி - பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-326-10241-8

சிறுகதைகள் பட்டியல் 'இந்தப் பட்டியலில் ஆரம்பக் காலத்தில் எழுதிய சிறுகதைகள் இடம்பெறவில்லை.'

சிறுகதைகள் ஆண்டு
1. வானத்தால் குதிக்கும் வடலிகள் 2013
2. அம்மா 2013
3. இரதியக்கா 2013
4. காதல் 2013
5. எங்கள் நீதி 2013
6. அகப்பைக்காம்பு 2013
7. இனி எந்தக்காடு…? 2015
8. அநித்தியம் 2015
9. கர்ண வேஷம் 2015
10. சீதாயனம் 2015
11. அவன் 2015
12. ஊத்தொய்யா 2015
13. இயற்கைக்கு 2015
14. பிரம்ம ஞானம் 2016
15. கிறிஸ்பூதம் 2016
16. கூத்தனின் நரகம் 2017
17. உடன் பிறப்பு 2017
18. வேதாளம் 2017
19. புத்தரும் சுந்தரனும் 2017
20. சங்கீதாவின் கோள் 2017
21. புத்தரின் கடைசிக் கண்ணீர் 2017
22. அவனே அவனைப் பார்த்து… 2018
23. கணேசர் வீட்டுப் பேய் 2018
24. பொக்கிசம் 2018
25. இருப்பல்ல இழப்பே இன்பம் 2018
26. குருவும் சிஷ்யனும் 2018
27. சாத்தான்கள் 2018
28. பலசரக்குக் கடைகள் 2018
29.தெய்வமில் கோயில் 2018
30. நரகம் சொர்க்கம் மோட்சம் 2018
31. வப்பு நாய் 2018
32. அல்லல் 2018
33. புதிய ஆத்மாக்கள் 2018
34. மீள்வு 2018
35. வளையா முதுகுகள் 2018
36. புகையின் பின் 2018
37. தாரணி 2018
38. முகமூடிகள் 2019
39. உதயம் 2019
40. எதிரிகள் 2019
41. சதை உண்ணும்… 2019
42. சொக்கட்டான் 2020
43. தானம் 2020
44. பிக்குணி 2022
45. கொல்லும் கனவு 2024
46. அடக்கம் 2024
47. அண்ணன்? 2024
48. உயிர்ப்பு ஞாயிறு 2024
49. குறிச்சி என்பது? 2024
50. கிளிக் 2024
51. சிரிப்பு வாயு 2024
52. வாடிய மனது… 2024
53. பால்புது 2024
54. அதளி 2024
55. விகாரம் 2024
56. பொறுத்தல் 2024
57. இறுதி தரிசனம் 2024
58. அப்பாவின் நண்பர்கள் 2025
59. சந்ததித்தப்பு 2025
60. ஆண்கள் அழக்கூடாதா? 2025
61. ஆத்ம திருப்தி 2025
62. மாறா வெடுக்கு 2025
63. மெது(slow) 2025
64. மூத்திர வண்டி 2025
65. புதிதாய் பிறந்த நாணம் 2025
66. மணலின் நிறம் 2025
67. கல்வெட்டு 2025
68. உருகும் உணர்வுகள் 2025
69. யார்? 2025
70. பிசகிய சுருதி 2025
71. யாவும் விருப்புடன் 2025
72. எஸ்ராவின் மரணம் 2025
73. விடிவு 2025
74. மொட்டைப் பிள்ளையார் 2025
75. நுண்ணுயிர் எதிர்ப்பி 2025
76. சிங்களம் 2025
77. சுவர்கள் கதவுகளாகின… 2026
78. சாட்சியாகும் சுவர்கள் 2026
79. ஆரபியின் ஓட்டம் 2026
80. நிழலின் விதை 2026

நோர்வே மொழியில்

ஆங்கிலத்தில்

மொழி பெயர்ப்புகள் (நோர்வே மொழியிலிருந்து தமிழுக்கு)

விருதுகள்

செந்தமிழ் செல்லும் வழியெது பார்- கவிதை - இலங்கைத் தமிழ்ச் சங்கம் - விக்டோரியா, முத்தமிழ் விழா, 1993.05.23 அன்று பரிசு பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.


"https://tamilar.wiki/w/index.php?title=இ._தியாகலிங்கம்&oldid=491047" இலிருந்து மீள்விக்கப்பட்டது