இ. தியாகலிங்கம்
- invoke:
| இயற்பெயர் | இ. தியாகலிங்கம் |
|---|---|
| பிறந்ததிகதி | 1967 |
| பிறந்தஇடம் | இலங்கை, காரைநகர் |
| புனைபெயர் | காரைநகரான், காரையூரான் |
| தேசியம் | நோர்வேஜியர் |
| அறியப்படுவது | எழுத்தாளர் |
| காலம் | 1984– தற்போதுவரை |
| வகை | சிறுகதை, புதினம், குறுநாவல், கவிதை |
| இணையதளம் | https://karainagaran.com/about/ |
இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.[1] இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.
1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்று, தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார் பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார் அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமானவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.
இறுதியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றியவர், அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில் அந்த இயக்கத்தைத் துறந்து, தனது வழியில் புறப்பட்டுச் சென்னையில் வந்து தங்கினார். அப்படியும் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால் அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்குச் சென்றார்.
பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார். இவரது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும் நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. இவரது முக்கிய படைப்புக்களாக நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் உள்ளன.
அமார் பொன்னுத்துரையுடன் நட்பு கொண்டிருந்த இவர் மித்ர பதிப்பகத்தின் ஊடாக தனது முதல் ஒன்பது படைப்புகளை வெளியிட்டார். பின்பு சுய வெளியீடாகத் தனது படைப்புகளை வெளியிட்டுவரும் இவர் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காகப் பாரம்பரிய முறையில் புத்தகங்களை வெளியிட்டு இயற்கையை அழிப்பதில் தானும் ஊக்கப்படுத்தாது இருப்பதற்கு மின் புத்தகங்களையும் வாங்கியபின் அச்சாகும் புத்தகங்களையுமே வெளியிட்டு வருகிறார்.
யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம் என்று அமரர் திரு ச. பொன்னுத்துரையால் விதந்துரைக்கப்பட்டவர்.
படைப்புகள்
- அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம்
- நாளை (1999) – புதினம்[2]
- பரதேசி (2008) – புதினம்
- வரம் (2009) – குறுநாவல் தொகுதி
- துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி
- திரிபு (2010) – புதினம்[3]
- எங்கே (2011) – புதினம்[4]
- ஒரு துளி நிழல் (2014) - புதினம்
- பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம்[5]
- மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம்[6]
- சர்வ உரூபிகரம் (2016) – புதினம்
- அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம்
- வப்பு நாய் (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
- துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம்
- காமமே காதலாகி (2016) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம்
- மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம்
- புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
- நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு
- இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி
- மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
- கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
- உறைவி (2022) – புதினம்
- ஒப்புரவு (2022) – புதினம்
- பேடும் மிதிக்கும் (2023) -- புதினம்
பிற மொழிகளில்
நோர்வே மொழியில்
- MENNESKEHETEN FALLER - Romanen, ISBN:979-8734658864
- I MORGEN - Romanen, ISBN:979-8745895258
- Allestedsnærværende - Romanen, ISBN:979-8735200659
- Avhopper? - Romanen, ISBN:979-8734189160
ஆங்கிலத்தில்
- Humanity is falling - Novel, ISBN:979-8733094632
- Tomorrow - Novel, ISBN:979-8733623474
- Omnipresent - Novel, ISBN:979-8737969943
- Deserter? - Novel, ISBN:979-8739676320
விருதுகள்
செந்தமிழ் செல்லும் வழியெது பார்- கவிதை - இலங்கைத் தமிழ்ச் சங்கம் - விக்டோரியா, முத்தமிழ் விழா, 1993.05.23 அன்று பரிசு பெற்றது.
மேற்கோள்கள்
- ஆவணகம் பார்த்த நாள் 18 சூலை 2019.
- நோர்வேத் தமிழர் வரலாறும் வாழ்வியலும் பேராசிரியர் செ.யோகராசா ஜீவநதி 95 ஆவணி 2016 பக்கம் 14-18 பார்த்த நாள் 15 ஆனி 2020.
- நோர்வேத்தமிழ் நாவல்: நாளை பார்த்த நாள் 17 ஆனி 2020.
- வரம்-துருவத்துளிகள்-பரதேசி-திரிபு-எங்கே : நூல்கள் வெளியீடு! பார்த்த நாள் 23 ஆனி 2020.
- தியாகலிங்கம் பார்த்த நாள் 23 ஆனி 2020.
- ”எங்கே” (எங்கள் போராட்டம்?) ஒரு பார்வை பார்த்த நாள் 23 ஆனி 2020.
- வலைஒளி பார்த்த நாள் 19 ஆனி 2020.
- விருது பார்த்த நாள் 26 கார்த்திகை 2021.
வெளி இணைப்புகள்
- ↑ புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம், திண்ணை, சு. குணேஸ்வரன், செப்டம்பர் 4, 2009
- ↑ நாளை, நூலகம் திட்டம், பார்த்த நாள் 22 சூலை 2019.
- ↑ "திரிபு". கூகுல் புக்ஸ். Retrieved 18 சூலை 2019.
- ↑ எங்கே பார்த்த நாள் 22 சூலை 2019
- ↑ பாராரிக்கூத்துக்கள் பார்த்த நாள் 22 சூலை 2019.
- ↑ மானிடம் வீழ்ந்ததம்மா, க._பூரணச்சந்திரன், மே 19, 2015, பார்த்த நாள் 22 சூலை 2019.