சோ. நடராசன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 08:28, 29 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

சோ. நடராசன் (இறப்பு: சூன் 28, 1988) ஈழத்து எழுத்தாளர். இவர் நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்டவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் ஆவார். பல கவிதைகள், சிறுகதைகள் எழுதியவர். தமிழில் முதல் ஒலிபரப்பாளராக இருந்தவர். தமிழ், சம்ஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருதம், சிங்கள மொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.[1] பத்திரிகை ஆசிரியராகவும், இலங்கை வானொலி தமிழ்ச்சேவை அறிவிப்பாளராகவும் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் புதல்வர் மேலும் நவாலியூர் சோ. இளமுருகனாரின் சகோதரனும் ஆவார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். ஆரம்பத்தில் இலங்கை தகவல் திணைக்களத்தில் ஒரு பத்திரிகை தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்தார். 1944இல் பட்டப்படிப்பை நிறைவு செய்து, கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னா் மூன்றாண்டு காலம் தமிழ் விரிவுரையாளராக விளங்கினார். பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றிய பின்னர், அரச கரும மொழித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், கல்வி வெளியீட்டுத் திணைக்கள உயர் அதிகாரியாகவும் பதவி வகித்தார்.

பிற்காலம்

சோ. நடராசன் பிற்காலத்தில் தர்மரத்ன தேரர் என்ற பெயரில் பௌத்த துறவியானார். 1988 சூன் 28 இல் தனது 78-வது அகவையில் காலமானார்.

எழுதிய நூல்கள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • இலங்கையின் பூர்வ சரித்திரம் (மொழிபெயர்ப்பு)
  • உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
  • கீதாஞ்சலி (குமரன் பதிப்பகம் கொழும்பு: 1950, 2008, மொழிபெயர்ப்பு)
  • மேகதூதம்
  • சித்தார்த்தர்
  • பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு)[2]
  • புத்த பகவான் அருளிய போதனை (மொழிபெயர்ப்பு)[3]
  • செய் மதி (மொழிபெயர்ப்பு, மூலம்: ரெஜி சிறிவர்த்தன, 1971)[4]
  • விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, 1966)
  • சிவானந்த நடனம் (மொழிபெயர்ப்பு, 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்)

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் (நூல்) - தம்பிஐயா தேவதாஸ், தி. இந்து - எஸ்.எஸ். உமா காந்தன் - May 17, 2016
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; SEU என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "மார்க்க பகுப்பாய்வு - பௌத்தமும் தமிழும்! bautham.net". Retrieved 26 மே 2016.
  4. "Cey mati (Book, 1971) [WorldCat.org]". Retrieved 26 மே 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=சோ._நடராசன்&oldid=81106" இலிருந்து மீள்விக்கப்பட்டது