வைரமுத்து

imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 10:42, 6 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{தகவற்சட்டம் நபர் | name =இரா. வைரமுத்து | image = Vairamuthu alaigal book shop.JPG|thumb|Vairamuthu | imagesize = 300 px | birth_name = வைரமுத்து | birth_date = {{birth date and age|1953|7|13}} | birth_place = வடுகபட்டி, தேனி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வைரமுத்து (Vairamuthu, பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

இரா. வைரமுத்து
பிறப்புவைரமுத்து
சூலை 13, 1953 (1953-07-13) (அகவை 72)
வடுகபட்டி, தேனி மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
பணிகவிஞர்
பாடலாசிரியர்
பிள்ளைகள்மதன் கார்க்கி
கபிலன்
விருதுகள்சிறந்த பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருதை 7 முறை (1985),(1993),(1994),(1999),(2002),(2010), (2016) பெற்ற பெருமைக்குரியவர், பத்ம ஸ்ரீ

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.[1]

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • வைகறை மேகங்கள்
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • இன்னொரு தேசியகீதம்
  • எனது பழைய பனையோலைகள்
  • கவிராஜன் கதை
  • இரத்த தானம்
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • தமிழுக்கு நிறமுண்டு
  • பெய்யெனப் பெய்யும் ம‌ழை
  • "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்"
  • கொடி மரத்தின் வேர்கள்

தன்வரலாறு

  • இதுவரை நான்

கட்டுரைகள்

  • கல்வெட்டுக்கள்
  • என் ஜன்னலின் வழியே
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • வடுகபட்டி முதல் வால்கா வரை
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • தமிழாற்றுப்படை[2]

புதினம்

 
வைரமுத்துவும் ஜெயகாந்தனும்
  • வானம் தொட்டுவிடும் தூரம்தான்
  • மீண்டும் என் தொட்டிலுக்கு
  • வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்)
  • சிகரங்களை நோக்கி
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • காவி நிறத்தில் ஒரு காதல்
  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
  • கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
  • மூன்றாம் உலகப்போர் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

ஒலி நாடாக்கள்

  • கவிதை கேளுங்கள்
  • தேன் வந்து பாயுது

விருதுகள்

விருது பெற்ற பாடல்கள்

  1. அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985.
  2. சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992.
  3. போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994
  4. முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999.
  5. நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002.
  6. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று) - 2010.
  7. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016
வருடம் விருது படைப்பு திரைப்படங்(கள்) குறிப்பு
1981 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது அலைகள் ஓய்வதில்லை
1986 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அனைத்துப் பாடல்களுக்கும் முதல் மரியாதை
1990 கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது
1993 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "சின்ன சின்ன ஆசை " ரோஜா
1995 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "போறாளே பொண்ணுத்தாயி ", "உயிரும் நீயே " கருத்தம்மா, பவித்ரா
1995 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கருத்தம்மா
1996 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது முத்து, பம்பாய்
2000 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்" சங்கமம்
2000 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது சங்கமம்
2003 பத்மசிறீ இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது
2003 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது நெஞ்சில் ஜில் ஜில் ஜில் கன்னத்தில் முத்தமிட்டால்
2006 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது அந்நியன்
2008 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெரியார்
2011 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "கள்ளிக் காட்டில்" தென்மேற்கு பருவக்காற்று

சிறப்புகள்

  • திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.[4]

திரைப்படப் பட்டியல்

மேற்கோள்கள்

  1. https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-met-karunanidhi-235543.html
  2. https://books.dinamalar.com/details.asp?id=25477
  3. "கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருது". Retrieved January 27, 2014.
  4. மத்திய பல்கலை. செனட் உறுப்பினராக வைரமுத்து நியமனம் (தினமணி செய்தி)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வைரமுத்து&oldid=90364" இலிருந்து மீள்விக்கப்பட்டது