கூடல் அழகர் கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கூடல் அழகர் பெருமாள் கோயில்
கூடல் அழகர் பெருமாள் கோயில் -முன் தோற்றம்
ஆள்கூறுகள்:9°54′52.0″N 78°06′49.8″E / 9.914444°N 78.113833°E / 9.914444; 78.113833
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:மதுரை
ஏற்றம்:163 m (535 அடி)
கோயில் தகவல்கள்
உற்சவர்:வியூக சுந்தரராஜ பெருமாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.[1][2] இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன.[3] இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.[4]

தமிழ் இலக்கியங்களில்

சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார்.

கூடலழகர் கோவில் மதுரை

இருந்தையூரில் ‘இருந்தையூர் இருந்த செல்வ’ என்னும் பரிபாடல்[5] தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும்போது ‘இது வைகைக்கரைக் கண்ணது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் அமைப்பு

கோயிலின் உட்புறத்திருந்து தெரியும் கோபுரத் தோற்றம்
குடமுழுக்கு (21 சனவரி 2024) நாளில் கோயிலின் ராஜகோபுரம், பின்புறத்தில் விமானம்

ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.[6] உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.

சிறப்பு

  • மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம். இதன் நிழல் தரையில் விழுவதில்லை.[7]
  • வைகாசி மாதம் இக்கோவிலில் பெருவிழா கொண்டாடப்படுகிறது. அனுச நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
  • புரட்டாசிமாதம் பௌர்ணமியன்று இந்தக் கோவிலில் நடைபெறும் ஐந்து கருடசேவை மிகவும் புகழ்பெற்றத் திருவிழா.

நவக்கிரக சன்னதி

பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சன்னதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சன்னதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.

 ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

  • ஸ்ரீ ராமாவதாரம் - சூரியன்
  • ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்
  • ஸ்ரீ நரசிம்மவதாரம் - செவ்வாய்
  • ஸ்ரீ கல்கியவதாரம் - புதன்
  • ஸ்ரீ வாமனவதாரம் - குரு
  • ஸ்ரீ பரசுராமாவதாரம் - சுக்ரன்
  • ஸ்ரீ கூர்மவதாரம் - சனி
  • ஸ்ரீ மச்சாவதாரம் - கேது
  • ஸ்ரீ வராகவதாரம் - ராகு
  • ஸ்ரீ பலராமவதாரம் - குளிகன்

என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.

குடமுழுக்கு

இக்கோயிலின் குடமுழுக்கு 20 சனவரி 2024இல் நடைபெற்றது.[10]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005

மேற்கோள்கள்

  1. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=533
  2. மு. இராகவையங்கார் ஆராய்ச்சித் தொகுதி, 1938, பக்கம் 24—244, ஸ்ரீ இருந்தவனமுடையார் கட்டுரை
  3. திருமங்கையாழ்வார் பாடல் 9-2-9. திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி 39
  4. தி. கி. இராமானுச ஐயங்கார், கூடற்புராணம் முகவுரை, 1929, பக்கம் 2.
  5. பரிபாடல் திரட்டு பாடல் 1
  6. [1]
  7. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=538
  8. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=535
  9. http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=537
  10. மதுரை கூடல் நகர் கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், ஜோதி டிவி, 20 சனவரி 2024

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=கூடல்_அழகர்_கோவில்&oldid=141753" இருந்து மீள்விக்கப்பட்டது