தஞ்சாவூர் குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆஞ்சநேயர்

தஞ்சாவூர் குருகுல சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] இக்கோயில் முன்னர் குருகுல சஞ்சீவி கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு

இக்கோயில் கோபுரம், மூலவர் கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக விநாயகர் உள்ளார்.

மூலவர்

இக்கோயிலின் மூலவராக சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளார்.

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, குருகுல சஞ்சீவி திருக்கோயில், ப.230-235, வ.எண்.47