அனுசுயா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனுசுயா
படிமம்:Triplets 2.jpg
மும்மூர்த்திகளை குழந்தைகளாக மாற்றும் அனுசுயா, ரவி வர்மாவின் சித்திரம்
பெற்றோர்கள்தேவகூதி (தாய்)
கர்தமர் (தந்தை)
குழந்தைகள்தத்தாத்ரேயர்
சந்திரன்
துர்வாசர்
நூல்கள்இராமாயணம், புராணம்

அனுசுயா, இந்து சமய புராணங்களில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படும் பெண். இவள் அத்திரி முனிவரின் மனைவி ஆவாள். இவள் தத்தாத்ரேயரின் தாய்.

மும்மூர்த்திகளும் அனுசுயாவின் கற்பின் திறனைச் சோதிக்க முனிவர்கள் வேடம் பூண்டு, அவள் வீட்டிற்கு வந்தனர். அவள் நிர்வாணமாக உணவளித்தால்தான் ஏற்றுக் கொள்வோம் எனக் கூறினர். அவள் தன் கற்பின் திறனால் மூவரையும் குழந்தைகளாக்கி பாலூட்டினாள். மும்மூர்த்திகளின் மனைவியர் அனுசுயாவை வேண்டி தம் கணவரைத் திரும்பப் பெற்றனர்.

இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளபடி, இராமனும் சீதையும், இவள் குடும்பம் வாழ்ந்த சித்திரகூடம் காட்டிற்கு வருகை தந்த போது, அவர்களை உபசரித்து உதவினாள்.[1] மேலும் சீதையின் அழகு, பொறுமை ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தாள். மேலும் தான் அணிந்திருந்த நகைகளை சீதைக்கு அணிவித்து அழகு பார்த்தாள். பின்னர் அந்ந நகைகள் சீதையிடமே இருக்கட்டும் என்று வழியணிவித்தாள்.[2] பக்தியுடனும் பணிவுடனும் வேலைகளைச் செய்தமையால் அரிய பெரும் சக்திகளைப் பெற்றாள்.

கோயில்

அனுசுயாவுக்ககு இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் சதி அனுசுயா கோயில் என்ற கோயில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. அத்திரி மலை
  2. "சீதையைக் காண உதவிய அனுசுயா!". Hindu Tamil Thisai. 2023-04-13. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.
"https://tamilar.wiki/index.php?title=அனுசுயா&oldid=38475" இருந்து மீள்விக்கப்பட்டது