நீலன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நளன் (வெள்ளை வானரம்), நீலன் (நீல வானரம்) இராமரிடம் உரையாடுதல். இடது:நளன் மற்றும் நீலன் வானரக் கூட்டங்களுக்குக் கற்கள் மற்றும் மரங்களைக் கொண்டு கடற்பாலம் அமைப்பது குறித்துக் கட்டளையிடுதல்

நீலன்,

நீலன் என்பதற்கு பல பொருள்கள் உள்ளது.

  1. இராமாயணக் காவியத்தில் கூறப்படும் வானரங்களின் ஒரு கூட்டத்தின் தலைவன். சுக்கிரீவனின் தலைமைப்படைத் தலைவர்களில் ஒருவர். [1][2] சிறந்த கட்டடக் கலைஞர். நீலன் மற்றும் நளன் தலைமையில் வானரக் கூட்டத்தின் உதவியுடன், இராமேஸ்வரம் முதல் இலங்கை வரை கடற்பாலம் நிறுவப்பட்டது. [3]நீலன், அக்கினிதேவனின் அம்சமாகப் பிறந்தவன். [3] இராவணன் கவர்ந்து சென்ற சீதையை, தெற்கு நோக்கித் தேடிய ஜாம்பவான், அங்கதன், மற்றும் அனுமார் உள்ளிட்ட வானரக் கூட்டங்களின் தலைவராக செயல்பட்டவர். [4]இராம-இராவணப் போரின் போது, வானரப் படைத்தலைவர் நீலன், பெரும் பாறைகளைக் கொண்டு, இந்திரஜித்தின் தம்பியான பிரகஸ்தனின் தலையிலும், கழுத்திலும் தாக்கி அழிக்கிறார். (Valmiki Ramayana, book 6, canto 58, verses 53,54)[5]
  2. வேல்பாரி நாவலில் வரும் ஒரு வீரனின் கதா பாத்திரம்.
  3. அயர்லாந்த் மொழியில் நிலன், நீல் என்பதற்கு Champion என்று பொருள்.

அடிக்குறிப்புகள்

  1. Venkatesananda pp. 270, 282, 301
  2. Lefeber & Goldman, p. 117
  3. 3.0 3.1 Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. p. 538. ISBN 0-8426-0822-2.
  4. Venkatesananda pp. 270, 282, 301
  5. Rao, Desiraju Hanumanta. "Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 58". www.valmikiramayan.net. Retrieved 2017-01-02.[தொடர்பிழந்த இணைப்பு]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நீலன்&oldid=417951" இலிருந்து மீள்விக்கப்பட்டது