கொமரலிங்கம்
| கொமரலிங்கம் | |||
| — கிராமம் — | |||
| ஆள்கூறு | 10°29′20″N 77°20′58″E / 10.489015°N 77.349436°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | திருப்பூர் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3] | ||
| ஊராட்சி மன்றத் தலைவர் | |||
| மக்கள் தொகை | 11,737 (2001[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
கொமரலிங்கம் (ஆங்கிலம்:KOMARALINGAM-) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி . மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமம் (கிராம எண்:39) ஆகும்.[4][5]
பெயர் சிறப்பு
கொங்கு நாட்டில் வாழ்ந்த வள்ளல்களில் குமணவள்ளல் பின் வந்தோர் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவ்வூர் அமராவதி ஆற்றின் கரையில் இருந்ததால் கரையூர் என அழைக்கப்பட்டதாக இங்குள்ள கல்யாண பெருமாள் கோவில் கல்வெட்டு தெறிவிக்கிறது.[6]
அமைவிடம்
பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பழனியிலிருந்து சுமார் 22 கி.மீ.தூரத்திலும், உடுமலைப்பேட்டையிலில் இருந்து 12 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 415 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 7 கி.மீ தூரத்தில் ஐவர்மலை சமணர் குகைகள் அமைந்துள்ளது.
முக்கிய பயிர்
இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), கரும்பு, வாழை அதிகமாக விளைகின்றன. இது அமராவதியாற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான நிலப்பகுதியாகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமம் கிராமத்தில் 1816 வீடுகள் உள்ளது. இவ்வூரில் 11737 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 5888,பெண்கள்5849 பாலின விகிதம் 962. எழுத்தறிவு பெற்றவர்கள் 6467 பேர். இதில் 3726 பேர் ஆண்கள்; 2741 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 62.38%. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 1341 ஆண் குழந்தைகள் 680,பெண் குழந்தைகள் 661 ஆவர்.[7]
நிர்வாக அலகு
- மாவட்டம்: திருப்பூர்
- வருவாய் கோட்டம்: உடுமலை
- வட்டம்:மடத்துக்குளம்
- வருவாய் கிராமம்: கொமரலிங்கம்
- பேரூராட்சி:கொமரலிங்கம்.
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-01-03.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-01-03.
- ↑ கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007-
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved சனவரி02, 2014.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)