சுதேவ் நாயர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுதேவ் நாயர்
பிறப்பு14 ஏப்ரல் 1985 (1985-04-14) (அகவை 41)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போது
வாழ்க்கைத்
துணை
Amardeep Kaur (தி. 2024)

சுதேவ் நாயர் (Sudev Nair, பிறப்பு: ஏப்ரல் 14, 1985) என்பவர் ஒரு இந்திய நடிகரும், வடிவழகரும் ஆவார், இவர் முதன்மையாக மலையாளப் படங்களிலும், சில தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலப் படங்களிலும் பணியாற்றியுள்ளார். மை லைஃப் பார்ட்னர் (2014) திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்.[1] அதற்காக இவருக்கு 2014 ஆம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான கேரள அரசு திரைப்பட விருது வழங்கப்பட்டது. அர்ஜுன் கபூருக்கு ஜோடியாக 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தியாஸ் மோஸ்ட் வாண்டட் என்ற இந்தி திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவரது மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகளில் குலாப் கேங் (2014), அனார்கலி (2015), கரிங்குன்னம் 6'ஸ் (2016) ஆகியவை அடங்கும். இவர் தெலுங்கு திரையுலகில் டைகர் நாகேஸ்வர ராவ் (2023) படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் (2023) படத்தில் முக்கிய எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்தார்.

துவக்க கால வாழ்க்கை

இளநிலை பொறியியல் பட்டப்படிப்புக்குப் பிறகு வளாக வேலைவாய்ப்பில் வேலை வாய்ப்பு பெற்ற போதிலும், திரைப்படம் மீதான ஆர்வத்தினால் புனே திரைப்படக் கல்லூரியில் முதுகலை படிப்பைப் படித்தார்.[2] இவரது திரைப்படப் படைப்பு வாழ்க்கை பல்வேறு குறும்படங்களுடன் தொடங்கியது. அவை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் மற்றும் விழாக்களில் கலந்துகொண்டன. மவுண்டன் டியூ குளிர்பானத்திற்கான இவரது குறுகிய விளம்பரப் படமானது 2010 இல் MOFILM பார்சிலோனா விளம்பரத் திரைப்பட விழாவில் இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

தொழில்

இவரது நடிப்பு வாழ்க்கை சௌமிக் சென் இயக்கிய இந்தி திரைப்படமான குலாப் கேங் (2014) படத்தில் தொடங்கியது. இந்தியப் பெண்களின் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்தி திரைப்படமான குலாப் கேங்கில் மாதுரி தீட்சித், ஜூஹி சாவ்லா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். இந்த திரைப்படம் இவரது நடிப்பிற்காக விமர்சகர்களால் பாராட்டப்பட்டது [3]. பின்னர் சுதேவ் அறிமுகமான எம்பி பத்மகுமாரின் மை லைஃப் பார்ட்னர் படத்தில் நடித்தார், இது இரண்டு ஆண்களுக்கு இடையிலான உணர்ச்சிபூர்வமான உறவைக் கொண்டதாக இருந்தது. இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தி, அதன் வெளியீட்டில் சிக்கல்களை எதிர்கொண்டது.[4] சுதேவ் கிரண் என்ற வேடத்தில் நடித்தார், அதற்காக இவர் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான கேரள அரசு திரைப்பட விருதைப் பெற்றார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

  • சிறந்த நடிகருக்கான கேரள அரசு திரைப்பட விருது - மை லைப் பார்ட்டனர்
  • மலநாடு தொலைக்காட்சி எதிர்மறையான பாத்திரத்தில் சிறந்த நடிகர் - பீஷ்ம பர்வம்
குறி
Films that have not yet been released இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது

திரைப்படவியல்

ஆண்டு பெயர் பாத்திரம் மொழி குறிப்புகள்
2014 மில்லியன் டாலர் ஆர்ம் செய்தித் தொகுப்பாளர் ஆங்கிலம்
குலாப் கேங் அர்ஜுன் சங்கர் இந்தி [5]
மை லைப் பார்ட்னர் கிரண் மலையாளம் [6]
2015 அனார்கலி நசீப் இமாம் [4]
2016 கரின்குன்னம் 6'ஸ் எக்ரு [7]
கேம்பஸ் டைரி நிகில் [7]
2017 எஸ்ரா ஆபிரகாம் எஸ்ரா [8]
2018 அங்கராஜ்யதே ஜிம்மன்மர் வில்லியம்
கால் கால்டாக்சி ஓட்டுநர் குறும்படம்
மென் அட் மை டோர் ஜெர்ரி குறும்படம்
ஆபிரகாமிண்டே சந்தாதிகள் சகோ. சைமன் [9]
காயங்குளம் கொச்சுண்ணி சுவாதித் திருநாள் ராம வர்மா
2019 மைக்கேல் பிரான்சிஸ் டேவி
அதிரன் ஜீவன் தாமஸ்
இன்டியாஸ் மோஸ்ட் வாண்டட் யூசுப் இந்தி
தக்கோல் சில்வெஸ்டர் மலையாளம்
மாமாங்கம் ரரிச்சன்
திருச்சூர் பூரம் சுதீப் ரங்கன்
2021 ஒன் எம்.பி. தினேஷ் ராஜன்
2022 ஓல்டு மங் சசாங்க் ராதாகிருஷ்ணா கன்னடம் [10]
பீஷ்ம பர்வம் ராஜன் மாதவன் நாயர் மலையாளம்
சிபிஐ 5: தி பிரெயின் எஸ்.ஐ. இக்பால்
டுவெண்டி ஒன் அவர்ஸ் ரஞ்சித் மேனன் கன்னடம் [11]
பத்தொன்பதாம் நூற்றாண்டு படவீடன் நம்பி மலையாளம் [12]
ஹெவன் டி.ஒய்.எஸ்.பி பிஜோய் குருவில்லா
கொத்து சி.ஐ. இந்திரஜித்
மான்ஸ்டர் அனில் சந்திரா [13][14]
கெடா சரத்
வழக்கு [15]
2023 துறமுகம் பச்சீக்
டைகர் நாகேஸ்வர ராவ் Kasi தெலுங்கு
எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் நீரோ
2024 தங்கமணி ராய் மலையாளம் [16]
தேவாரா: பாகம் 1 சமாரா தெலுங்கு [17][18]
2025 பிரீடம் TBA தமிழ் [19]
2026 டாக்சிக்: எ பெய்ரி டெல் பார் குரவுன்-அப்ஸ் TBA கனடம்
ஆங்கிலம்
[20]

தொலைக்காட்சி

ஆண்டு பெயர் பாத்திரம் அலைவரிசை மொழி
2023 தி ஜெங்காபுரு குரூஸ் துருவ் கனன் சோனிலிவ் இந்தி

மேற்கோள்கள்

  1. "The Best Actor, Sudev". OneIndia.com. Archived from the original on 13 August 2015. Retrieved 31 August 2015.
  2. "I was surprised:Sudev Nair". Deccan Chronicle. 12 August 2015. Archived from the original on 15 August 2015. Retrieved 31 August 2015.
  3. "Gulab Gang, the old story of good vs evil". 7 March 2014. Archived from the original on 25 May 2015. Retrieved 31 August 2015.
  4. 4.0 4.1 "Following his heart". தி இந்து. 20 August 2015. Archived from the original on 21 May 2017. Retrieved 31 August 2015.
  5. "Gulaab Gang". பாலிவுட் கங்காமா. Archived from the original on 8 May 2012.
  6. "My Life Partner (2014)". Now Running. Archived from the original on 23 May 2018. Retrieved 5 November 2015.
  7. 7.0 7.1 "Sudev Nair to play a student leader". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 18 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160518134113/http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Sudev-Nair-to-play-a-student-leader/articleshow/51879354.cms. 
  8. "Ezra review: Almost 'dybbuk'ed, but not debunked". https://www.newindianexpress.com/review/2017/Feb/11/ezra-review-almost-dybbuked-but-not-debunked-1569305.html. 
  9. "Sudev Nair in 'Kayamkulam Kochunni' and 'Abrahaminte Santhathikal'". The Times Of India இம் மூலத்தில் இருந்து 16 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180616185922/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/sudev-nair-in-kayamkulam-kochunni-and-abrahaminte-santhathikal/articleshow/63009226.cms. 
  10. "Trailer Talk: M.G. Srini's 'Old Monk' promises a full-fledged family entertainer will plenty of laughs". Times Of India இம் மூலத்தில் இருந்து 15 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230715120256/https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/trailer-talk-m-g-srinis-old-monk-promises-a-full-fledged-family-entertainer-will-plenty-of-laughs/articleshow/85662746.cms. 
  11. "Durga Krishna, Rahul Madhav and Sudev Nair star in the Kannada thriller, 21 Hours". The Times Of India இம் மூலத்தில் இருந்து 15 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230715120256/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/durga-krishna-rahul-madhav-and-sudev-nair-star-in-the-kannada-thriller-21-hours/articleshow/78694670.cms. 
  12. "പടവീടൻ നമ്പിയായി സുദേവ് നായർ; 'പത്തൊൻപതാം നൂറ്റാണ്ടിലെ' ക്യാരക്റ്റർ പോസ്റ്റർ പുറത്തിറങ്ങി". News18. 24 August 2021. Archived from the original on 26 August 2021. Retrieved 26 August 2021.
  13. "Sudev Nair: I have never tried to fit in". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 20 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221020102407/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/sudev-nair-i-have-never-tried-to-fit-in/articleshow/88858197.cms. 
  14. "Mohanlal, Lakshmi Manchu, Honey Rose, Sudev Nair - Here's how the cast of 'Monster' works out while shooting". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 10 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220910113058/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mohanlal-lakshmi-manchu-honey-rose-sudev-nair-heres-how-the-cast-of-monster-works-out-while-shooting/articleshow/87862695.cms. 
  15. "Sudev Nair shares hilarious joke about New Year cake-cutting on Vazhak sets". The Times Of India இம் மூலத்தில் இருந்து 15 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230715120258/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/sudev-nair-shares-hilarious-joke-about-new-year-cake-cutting-on-vazhak-sets/articleshow/80073278.cms. 
  16. "First look of Dileep's Thankamani out". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 21 October 2023. Retrieved 2024-03-03.
  17. Sistu, Suhas (16 February 2024). "Jr NTR's 'Devara: Part 1'new release date announced, locks for Dussehra 2024". www.thehansindia.com (in ஆங்கிலம்). Archived from the original on 29 September 2024. Retrieved 16 February 2024.
  18. "దేవర సినిమా ఎలా ఉంటుందో...|| Villain Sudev Nair Comments on Devara Movie || Swatantra Tv Live ||". யூடியூப். 17 July 2024.
  19. Kumar, Akshay (2025-05-09). "Sasikumar's Freedom gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.
  20. Daily, Keralakaumudi. "Yash's stylish avatar in Geethu Mohandas' directorial; 'Toxic' birthday peek goes viral". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). Retrieved 2025-02-07.
"https://tamilar.wiki/w/index.php?title=சுதேவ்_நாயர்&oldid=366675" இலிருந்து மீள்விக்கப்பட்டது