பிரீடம்
பிரீடம் என்பது வெளிவர இருக்கும் இந்திய தமிழ், அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். விஜய கணபதி பிக்சர்ஸ் என்ற பதாகையின் கீழ் பாண்டியன் பரசுராமன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் எம். சசிகுமார் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.[2] [3]
| பிரீடம் | |
|---|---|
சுவரிதழ் | |
| இயக்கம் | சத்யசிவா |
| தயாரிப்பு | பாண்டியன் பரசுராமன் |
| கதை | சத்யசிவா |
| இசை | ஜிப்ரான் |
| நடிப்பு | சசிகுமார் லிஜோமோல் ஜோஸ் |
| ஒளிப்பதிவு | என். எஸ். உதயகுமார் |
| படத்தொகுப்பு | என். பி. சிறீகாந்த் |
| கலையகம் | விஜய கணபதி பிக்சர்ஸ் |
| ஓட்டம் | 129 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கதை
இப்படத்தின் கதையனது 1995 வேலூர் கோட்டை சிறை தகர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.
நடிகர்கள்
தயாரிப்பு
கழுகு (2012), சவாலே சமாளி (2015) படங்களில் புகழ்பெற்ற சத்யசிவா 2024 பிப்ரவரி தொடக்கத்தில், நான் மிருகமாய் மாற (2022) படத்திற்குப் பிறகு சசிகுமாருடன் மீண்டும் இணைந்தார். அவர் இயக்கிய பிரீடம் திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. [5] சசிகுமாரும், லிஜோமோலும் இலங்கை அகதிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மு ராமசாமி, சரவணன், ரமேஷ் கண்ணா சுதேவ் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை விஜய கணபதியின் பிக்சர்ஸ் பதாகையில் பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை என். எஸ். உதயகுமார் மேற்கொள்ள, படத்தொகுப்பை என். பி. சிறீகாந்த் மேற்கொண்டார். [6] 2025 சூன் 23 அன்று, படப்பிடிப்பு முடிந்தது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.[7]
இசை
இப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதன் வழியக சத்யசிவாவுடன் இரண்டாவது முறையாகவும், சசிகுமாருடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றுயுள்ளார்.[8] முதல் தனிப்பாடலான "ஆகாயம் அம்புட்டையும்" 2024 நவம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. [9] இரண்டாவது தனிப்பாடலான "ஆரிரோ ஆராரிரோ" 2025 சூன் 30, 2025 அன்று வெளியானது. [10]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "ஆகயம் அம்புட்டையும்" | பிரதீப் குமார் | ||||||||
| 2. | "ஆரிரோ ஆராரிரோ" | வைக்கம் விஜயலட்சுமி | ||||||||
வெளியீடு
திரையரங்கம்
முன்னதாக பிரீடம் சூலை 10 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் வெளியீடு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு,[11] 2025 சூலை 18 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.[12] ஆனால் வெளியீட்டு தேதி அறிவிப்பின்றி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. [13] இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. [14]
வரவேற்பு
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அபினவ் சுப்பிரமணியன் 2.5/5 நட்சத்திரங்களை வழங்கி, "பிரீடம் என்பது பலர் புறக்கணிக்க விரும்பும் ஒரு இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம். இது மிகவும் கவர்ச்சிகரமான படம் அல்ல, என்றாலும் அந்த 43 கைதிகளின் உண்மைக் கதையைப் பார்க்க வைக்கும் அளவுக்கு சுவாரஸ்யமானது" என்று எழுதினார். [15]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Freedom (15)". British Board of Film Classification (in ஆங்கிலம்). 4 July 2025. Retrieved 4 July 2025.
- ↑ "Sasikumar, Lijomol Jose film with Sathyasiva titled 'Freedom'" (in en-IN). 2024-02-08. https://www.thehindu.com/entertainment/movies/sasikumar-lijomol-jose-film-with-sathyasiva-titled-freedom/article67825375.ece.
- ↑ Features, C. E. (2024-10-11). "Sasikumar starrer Freedom makers release special poster". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.
- ↑ "சசிகுமார் நடித்த Freedom படத்தின் முக்கிய அறிவிப்பு விரைவில்... | An important announcement about the film Freedom starring Sasikumar will be made soon..." மாலை மலர். 2025-05-06. Retrieved 2025-05-11.
- ↑ M, Narayani (2024-02-10). "Sasikumar-Lijomol Jose film titled Freedom". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.
- ↑ Kumar, Akshay (2025-05-09). "Sasikumar's Freedom gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Archived from the original on 2025-05-09. Retrieved 2025-05-11.
- ↑ Kumar, Akshay (2025-06-23). "Sasikumar's Freedom wraps filming". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-06-23.
- ↑ M, Narayani (2024-02-09). "Sasikumar's next with Lijomol Jose titled Freedom". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.
- ↑ M, Narayani (2024-11-09). "First single 'Aagayam Ambuttayum' from Sasikumar-Lijomol Jose's Freedom out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.
- ↑ Features, C. E. (2025-07-01). "'Aariro Arariro' from Sasikumar's Freedom is a powerful lullaby rendered by Vaikom Vijayalakshmi". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-01.
- ↑ Features, C. E. (2025-07-10). "Sasikumar's Freedom release postponed". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-10.
- ↑ Features, C. E. (2025-07-11). "Sasikumar says Freedom will release in theatres next week". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-11.
- ↑ Kumar, Akshay (2025-07-17). "Sasikumar-Lijomol's Freedom release rescheduled indefinitely". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-07-17.
- ↑ Kumar, Akshay (2025-05-09). "Sasikumar's Freedom gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-05-21.
- ↑ "Freedom Movie Review: Confined by Its Own Righteousness". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-07-11.