ஆள்கூறுகள்: 20°50′N 83°55′E / 20.83°N 83.92°E / 20.83; 83.92

சுபர்ணபூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சுபர்ணபூர்

நகரம்
சோனாப்பூர்
சுபர்ணபூர் is located in ஒடிசா
சுபர்ணபூர்
சுபர்ணபூர்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் சுபர்ணபூரின் அமைவிடம்
சுபர்ணபூர் is located in இந்தியா
சுபர்ணபூர்
சுபர்ணபூர்
சுபர்ணபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°50′N 83°55′E / 20.83°N 83.92°E / 20.83; 83.92
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்சுபர்ணபூர் மாவட்டம்
ஏற்றம்
121 m (397 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்20,770
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா மொழி
 • வட்டார மொழிசம்பல்புரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
767017
தொலைபேசி குறியீடு06654
வாகனப் பதிவுOD-31
இணையதளம்https://subarnapur.odisha.gov.in/

சுபர்ணபூர் அல்லது சோனாப்பூர் (Subarnapur), ஒடிசா மாநிலத்தின் சுவர்ணபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான புவனேசுவரத்திற்கு மேற்கே 272 கிலோ மீட்டர் தொலைவிலும், பலாங்கீர் நகரத்திலிருந்து 49 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் மகாநதி ஆறும் தேல் ஆறும் கூடுகின்றன. சுவர்ணபூர் நகரம் பட்டு நூல் நெசவு, சுடுமண் பாண்டங்களுக்கு பெயர் பெற்றது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சோன்பூர் சமஸ்தானத்தின் தலைநகராக சுவர்ணபூர் நகரம் விளங்கியது.[1]இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 121 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளும், 4,845 குடியிருப்புகளும் கொண்ட சுபர்ணபூர் நகரத்தின் மக்கள் தொகை 20,770 ஆகும். இதில் 10,709 பேர் ஆண்கள்; 10,061 பேர் பெண்கள். இதன் மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.10% வீதம் உள்ளனர். 1000 ஆண்களுக்கு 939 பெண்கள் என்கிற அளவில் பாலின விகிதம் அமைந்துள்ளது. சராசரி எழுத்தறிவு 88.49 % வீதமாக உள்ளது. இதன் மக்கள் தொகையில் 26.17% பட்டியல் சாதியினரும் 2.61% பட்டியல் பழங்குடியினரும் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 96.70%, இசுலாமியர் 2.32%, கிறித்தவர்கள் 0.78%, பிற சமயத்தினர் 0.20% வீதம் உள்ளனர்.[2]

தொடருந்து நிலையம்

சுபர்ணாபூர் தொடருந்து நிலையம் பலாங்கீர், புரி, புவனேசுவரம், ஜம்மு தாவி ஆகிய நகரங்கள் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்

  1. "Indian Princely States K-Z". www.worldstatesmen.org.
  2. "Sonapur Municipality City Population Census 2011-2025 | Orissa". www.census2011.co.in.
  3. "Sonepur (SNPU) Railway Station - Station Code, Schedule & Train Enquiry | ixigo". www.ixigo.com.
"https://tamilar.wiki/w/index.php?title=சுபர்ணபூர்&oldid=364967" இலிருந்து மீள்விக்கப்பட்டது