சுவஸ்திக் கிணறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

சுவஸ்திக் கிணறு அல்லது மார்பிடுகு பெருங்கிணறு [1] பல்லவ மன்னன் தந்திவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டது. சுவசுத்திக்கா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில் முன்பாக உள்ள இந்த சுவஸ்திக் கிணறு, திருச்சிராப்பள்ளியில் இருந்து துறையூர் செல்லும் வழியில், மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருவெல்லாறை என்ற ஊரில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் இக்கிணற்றை சீரமைத்ததால், புதுப்பொழிவுடன் உள்ளது.[2][3]

சிறப்பு

சுவஸ்திக் வடிவில் இக்கிணறு அமைந்துள்ளதால், இதில் ஒரு துறையில் நீராடுபவர்கள், அடுத்த துறையில் இருப்போரைக் காண முடியாத சிறப்பான அமைப்பாக உள்ளது.[1]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=சுவஸ்திக்_கிணறு&oldid=367284" இலிருந்து மீள்விக்கப்பட்டது