ஜோக்கர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜோக்கர்
மன்னர் மன்னன் என்கிற ஜோக்கர்
இயக்கம்ராஜு முருகன்
தயாரிப்புஎஸ். ஆர். பிரகாஸ் பாபு
எஸ்.ஆர். பிரபு
கதைராஜு முருகன்
இசைஸ்யான் ரொலாண்ட்
நடிப்புகுரு சோமசுந்தரம்
ரம்யா பாண்டியன்
ஒளிப்பதிவுசெழியன்
படத்தொகுப்புசண்முக வேலுசாமி
கலையகம்டிரீம் வாரீயார் பிச்சர்ஸ்
வெளியீடு12 ஆகஸ்ட் 2016
ஓட்டம்130 நிமிடம்
மொழிதமிழ்

ஜோக்கர் (Joker) என்பது 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான அரசியல் மற்றும் சமூக பகடித் திரைப்படமாகும். ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பவா செல்லத்துரை, ராமசாமி போன்றவர்கள் நடித்துள்ளனர்.[1]

தயாரிப்பு

தனது முதல் படமான குக்கூ முடித்த 6 மாதங்கள் கழித்து, ராஜு முருகன் இந்த திரைப்படத்தின் கதையை முடிவுசெய்தார். தர்மபுரியை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் அந்த ஊரிலேயே தங்கி இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.

கதையின் நாயகனாக குரு சோமசுந்தரம் தேர்வு செய்யப்பட்டார். குக்கூ திரைப்பட இசையமைப்பாளரின் வலியுறுத்தலின் பெயரில் ராஜு, ஸ்யான் ரொலாண்ட்யை தேர்வு செய்தார்.

மொத்தம் 50 நாட்கள் திடடமிடப்பட்டு தர்மபுரி பகுதியில் இந்தத் திரைப்படம் பதிவு செய்யப் பட்டது. பதிவதற்கு முன்பே அனைத்து காடசிகளும் பயிற்சி செய்யப்படடன என்பதும் கூடுதல் தகவல்.[2]

இசை

இந்தப் படத்தின் முதல் இசை பாடல் " என்னங்க சார் உங்க சட்டம் " ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வெளியானது. ஒரு முட்டாள் பற்றிய கதை என்பதால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் இந்த நிகழ்வு பேசப்பட்டது.[2]

இந்தப்படத்தின் மற்ற 5 இசைப் பாடல்கள் ஒருசேர ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் இசை பெருவாரியாக நல்ல வரவேற்பையே பெற்றன.[3]

இந்த திரைப்படத்தின் இசையை தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பல நாட்டுப்புர இசைக் கலைஞர்கள் பாடியுள்ளனர் [4]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) நேரம்(நிமிடம்)
1 எண்ணங்க சார் உங்க சட்டம் யுகபாரதி அறந்தை பாவா, கே.பெருமாள் 4.16
2 ஓலா ஓலா குடிசையில யுகபாரதி முருகவேல் கார்த்திகா வைத்தியநாதன் 4.14
3 ஜாஸ்மினு யுகபாரதி சுந்தரய்யர் 3.33
4 ஹல்லா போல் ( உறக்கக் சொல் ) ஸ்யான் ரொலாண்ட் ஸ்யான் ரொலாண்ட், கல்யாணி நாயர், யுகபாரதி 2.55
5 மன்னர் மன்னன் பின்னணி இசை ஸ்யான் ரொலாண்ட் ராணி 2.30
6 செல்லமா இரமேஷ் வைத்யா ஸ்யான் ரொலாண்ட், கே. பெருமாள், எம். லலிதா சுதா 4.10

கதை

தான் விரும்பி மனம் முடிக்கும் பெண் விருப்பத்திற்காக மன்னர் மன்னன் என்பவர் ஒரு கழிப்பறை கட்ட முயல்கிறார். அரசாங்க கடனுதவியுடன் - "வாழ்ந்து பாப்போம்" என்று பெயரிடப் பட்ட திட்டத்தின் கீழ் அரைகுறையாய் ஒரு கழிப்பறையை கட்டி முடிக்கிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் சம்மதம் பெற்று அவரை திருமணமும் செய்கிறார்.

பின் நிகழும் சம்பவங்களால், மன்னர் மன்னன் மனநிலை பிறழ்கிறார். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் இந்த படமாகின்றன

மேற்கோள்கள்

  1. "Raju Murugan's Joker is a socia-political satire". onlykollywood.com. 24 March 2016. http://www.onlykollywood.com/raju-murugans-joker-is-a-socio-political-satire/. பார்த்த நாள்: 24 March 2016. 
  2. 2.0 2.1 http://www.thehindu.com/features/cinema/director-raju-murugan-on-his-upcoming-film-joker/article8399316.ece
  3. "Joker (aka) Joker songs review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
  4. http://www.indiaglitz.com/joker-tamil-music-review-20629.html

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=ஜோக்கர்&oldid=38061" இருந்து மீள்விக்கப்பட்டது