தக் லைஃப்
| தக் லைஃப் | |
|---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
| இயக்கம் | மணிரத்னம் |
| தயாரிப்பு | ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஜ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ் |
| இசை | ஏ. ஆர். ரகுமான் |
| நடிப்பு | கமல் சிலம்பரசன் த்ரிஷா |
| வெளியீடு | 5 சூன் 2025 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தக் லைஃப் (Thug life) 2025-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்-மணிரத்னம் கைக்கோர்த்துள்ள தமிழ்த் திரைப்படம் இது வாகும். இந்தத் திரைப்படம் கமலின் 234-வது திரைப்படம் ஆகும். இதில் திரிசா, சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.[1] சூன் 5, 2025 அன்று திரைப்படம் வெளியானது.[2]
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ரங்கராய சக்திவேல்
- சிலம்பரசன் - அமரன் (அமர்)
- திரிஷா கிருஷ்ணன் - இந்திராணி
- ஐஸ்வர்யா இலட்சுமி - அன்னா (சந்திரா)
- அபிராமி - ஜீவா சக்திவேல்
- அசோக் செல்வன் - ஜெய்
- சான்யா மல்கோத்ரா - சிறப்பு தோற்றம்
- ஜோஜு ஜார்ஜ்
- நாசர் - ரங்கராய மாணிக்கவேல்
- பங்கஜ் திரிபாதி
- தனிகில்லா பரணி - சிவகுரு
- வடிவுக்கரசி - பேச்சி
- சின்னி ஜெயந்த்
- வையாபுரி
- பகவதி பெருமாள்
- பாபுராசு - சாமுவேல்
- சேத்தன்
- இராஜ்சிறீ தேஷ்பாண்டே
இசை
திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார்.
| # | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | |
|---|---|---|---|---|---|
| 1. | "ஜிங்குச்சா" | கமல்ஹாசன் | வைசாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர்.கே. | 4:35 | |
| 2. | "சுகர் பேபி" | சிவா ஆனந்த், ஏ. ஆர். ரகுமான், சுபா | அலேக்சான்ட்ரா ஜாய், சுபா, சரத் சந்தோஷ் | 3:31 | |
| 3. | "முத்த மழை" | சிவா ஆனந்த் | தீ | 4:01 | |
| 4. | "விண்வெளி நாயகா" | கார்த்திக் நேத்தா | சுருதி ஹாசன், பிரசாந்த் வெங்கட், ஏ. ஆர். அமீன் | 4:34 | |
| 5. | "அஞ்சு வண்ணப் பூவே" | கார்த்திக் நேத்தா | சாருலதா மணி | 4:37 | |
| 6. | "ஓ மாறா" | பால் டப்பா | பால் டப்பா | 3:00 | |
| 7. | "எங்கேயோ" | சிவா ஆனந்த் | இரக்சிதா சுரேஷ் | 2:56 | |
| 8. | "லெட்ஸ் பிளே" | தாட்ஸ்பார்நவ் | தாட்ஸ்பார்நவ் | 2:39 | |
| 9. | "அஞ்சு வண்ண பூவே" (மற்றொரு வடிவம்) | கார்த்திக் நேத்தா | ஏ. ஆர். ரகுமான் | 4:14 | |
மொத்த நீளம்: |
34:07 | ||||
தயாரிப்பு
தக் லைஃப் படத்தினை தமிழ்த் திரைப்படத்துறையின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
வெளியீடு
தக் லைஃப் திரையரங்குகளில் 2025 சூன் 5 அன்று வழக்கமான முறையிலும் ஐமேக்சு வடிவத்திலும் வெளியானது.[3] இத்திரைப்படம் திரையரங்குகளில் ஓடி முடித்த பிறகு, இணையத்தில் திரையிடும் உரிமத்தை நெட்ஃபிளிக்சு நிறுவனம் ₹149.7 கோடி (ஐஅ$17 மில்லியன்) கொடுத்து வாங்கியுள்ளது.[4]
விமர்சனங்கள்
தினமணி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "சாகா வரம்போல் சோகம் உண்டா? எனத் தன் படத்தில் கேட்ட கமல், தக் லைஃப்-ல் என்ன நடந்தாலும் தனக்கு மட்டும் சாவே வருவதில்லை என ஜாலியாக இருக்கிறார். படத்தில் கமலுக்கு உண்மையான வில்லன் எமன்தான். நாயகனில் கேட்கப்பட்ட நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்கிற கேள்விக்கு தக் லைஃபிலும் கமல் பதிலளிக்கவில்லை!" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5] ஆனந்த விகடன் வலைத்தளத்தில் வந்த விமர்சனத்தில் "தொழில்நுட்ப ரீதியாக ‘தக் லைஃப்’ கண்ணாடியைப் போட்டு மிரட்டும் இந்தப் படம், திரைக்கதையில் அந்தக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டதால் சுவாரஸ்யத்தை நாம் தேட வேண்டியதாக இருக்கிறது" என்று எழுதினர்.[6] இந்து தமிழ் திசை வலைத்தளத்தில் வந்த விமர்சனத்தில் "கமல் - மணிரத்னம் என்ற இருபெரும் ஆளுமைகள் இருந்தும் கூட இப்படத்தை காப்பாற்ற முடியாமல் போனது சோகம். ‘க்ளாசிக்’ அந்தஸ்தை பெற்றுவிட்ட ‘நாயகன்’ அளவுக்கு இல்லையென்றாலும் கூட ஓரளவு ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களை திருப்திபடுத்தி இருந்தால் படத்துக்கு செய்த பிரம்மாண்ட விளம்பரங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்" என்று எழுதினர்.[7]
மேற்கோள்கள்
- ↑ "ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா கமலின் 'தக் லைஃப்' அறிமுக வீடியோ? - பின்னணி இதுதான்!". Hindu Tamil Thisai. 2023-11-08. Retrieved 2025-03-01.
- ↑ "Thug Life: Kamal Haasan REVEALS the real reason to reunite with Mani Ratnam". Bollywood Life (in ஆங்கிலம்). 2025-04-18. Retrieved 2025-04-19.
- ↑ "Kamal Haasan's Thug Life to release in June 2025, makers share teaser on birthday". இந்தியா டுடே (in ஆங்கிலம்). 7 November 2024. Archived from the original on 16 November 2024. Retrieved 7 November 2024.
- ↑ Jayaraman, N. P. (20 September 2024). "'Thug Life': Streaming rights to Kamal Haasan-Mani Ratnam movie sold for unprecedented amount to Netflix". டெக்கான் ஹெரால்ட் (in ஆங்கிலம்). Archived from the original on 20 September 2024. Retrieved 20 September 2024.
- ↑ சிவசங்கர் (2025-06-05). "வென்றதா நாயகன் கூட்டணி? தக் லைஃப் - திரை விமர்சனம்!". தினமணி. Retrieved 2025-06-05.
- ↑ டீம், விகடன் (2025-06-05). "Thug Life Review: கமல்ஹாசன் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?". விகடன். Retrieved 2025-06-05.
- ↑ "'தக் லைஃப்' விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?". இந்து தமிழ் திசை. 2025-06-05. Retrieved 2025-06-05.