தெள்ளியன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தெள்ளியன் (பிறப்பு: நவம்பர் 5) தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்றறிஞர், இதழாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாசிரியர் ஆவார். இவர் 'தழல்' என்ற இலக்கிய மற்றும் சமூக இதழின் பதிப்பாசிரியராகச் செயல்பட்டு வருகிறார். இவர் தென்றல், தெருளன் ஆகிய புனைப்பெயர்களிலும் தனது படைப்புகளை எழுதி வருகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்புப்பெயரனும் பேராசிரியர் அருளியார்- தழல் தேன்மொழி இணையருக்கு இரண்டாம் மகனாக சென்னையில் பிறந்த இவர், தனது கல்லூரிப் படிப்பை இசைத்துறையில் பெற்று பின்னர், திரை ஊடகத்துறை சார்ந்த தொழில்நுட்பங்களில் கொண்ட ஆர்வத்தால், 'ஆப்டெக்' (Aptech) நிறுவனத்தில் 'விஷுவல் எஃபெக்ட்ஸ்' (Visual Effects) பாடப்பிரிவில் பட்டயம் பெற்றார். ஊடகத்துறையில் நீண்ட பட்டறிவையும் பெற்றவர்.