மு. இராமசாமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மு. இராமசாமி
பிறப்புமுருகையா இராமசாமி
ஏப்ரல் 12, 1951 (1951-04-12) (அகவை 75)
மதுரை, தமிழ்நாடு
மற்ற பெயர்கள்இராமசாமி, எம். இராமசாமி
பணிநாடகக் கலைஞர்
நாடகவியல் பேராசிரியர்
நடிகர்
வாழ்க்கைத்
துணை
செண்பகம்[1]

மு. இராமசாமி (Mu Ramaswamy, 4 திசம்பர் 1951) என்பவர் பேராசிரியர், எழுத்தாளர், நாடகக்கலைஞர், நடிகர், திரைப்படத் திறனாய்வாளர் ஆவார். இவர் சாஃபக்கிளீசின் நாடகமான ஆண்டிகோனின் தமிழ்த் தழுவலான துர்கிர அவலம் மற்றும் பெரியார் ஈ. வே. இராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கலகக்காரர் தோழர் பெரியார் ஆகிய நாடகங்களுக்காக மிகவும் பிரபலமானவர். பின்னர் இவர் ஜோக்கர் (2016) மற்றும் கே. டி. (2019) போன்ற படங்களில் தொடங்கி தமிழ்ப் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பிறப்பும் படிப்பும்

இராமசாமியின் தந்தையின் ஊர் பாளையங்கோட்டை; தாயின் ஊர் அம்பாசமுத்திரம். பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டை அந்தோணியார் பள்ளியிலும் கல்லூரிப்படிப்பை முதுகலை வரை பாளையங்கோட்டைக் கல்லூரியிலும் படித்து முடித்தார். மதுரைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தோற்பாவை நிழற் கூத்து என்னும் கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[2] மதுரைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த பொழுது கூத்துக் களரி என்ற கல்வித் திட்டத்தை உருவாக்கினார். தமிழ்த் திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதினார்.

நாடக வாழ்க்கை

இவர் ‘நிஜ நாடக இயக்கம்’ என்ற நாடகக் குழுவை உருவாக்கி பல நாடகங்களை நடத்தியுள்ளார். நடிப்பில் இவருக்கு இருந்த ஆர்வத்தினால், துர்கிர அவலம், கழகக்காரர் தோழர் பெரியார் உள்ளிட்ட பல நாடகங்களைத் தமிழில் அரங்கேற்றினார். தமிழ் மீதான இவரது அன்பின் காரணமாகப் பல நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த சில நாடகங்களில் ஜி. சங்கர பிள்ளை, பெர்தோல்ட் பிரெக்ட் ஆகியோரின் நாடகங்களும் அடங்கும்.[1][3]

திரைப்பட வாழ்க்கை

இராமசாமியின் நாடகத் திறமையைக் கவனித்த நாசர் அவரது தேவதை, மாயன் போன்ற படங்களில் துணை வேடங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.[1] பல படங்களில் துணை வேடங்களில் நடித்த நிலையில், இராமசாமி ஜோக்கர், கே.டி. ஆகிய படங்களில் தொடங்கி முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.[4][5]

நடத்திய நாடகங்கள்

  • பாதல் சர்க்காரின் ஸ்பார்ட்டகஸ் நாடகம்
  • குஜராத்துக் கலவரத்தை விமர்சிக்கும் கட்டுண்ட பிரமோதியஸ்
  • பெர்டோல்ட் பாரக்கட்டின் கலிலியோ கலீலீ
  • நந்தன் கதை
  • தோழர்கள்
  • கலகக்காரர் தோழர் பெரியார்[1]
  • துர்கிர அவலம்
  • கங்கையின் மைந்தன்[1]
  • பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்[1]
  • படுகாவலன்[1]
  • துர்கிரா அவலம் - சாஃபக்கிளீசின் நாடகமான ஆன்டிகோனின் தமிழ் தழுவல்[1]
  • பொன்னியின் செல்வன் - பெரிய பழுவேட்டரையராக[6][7]

திரைப்படவியல்

திரைப்படங்கள்

  • குறிப்பில் ஏதும் குறிப்பிடப்படாதவை, அனைத்தும் தமிழ்ப் படங்களே.
குறியீடு
Films that have not yet been released இன்னும் வெளியிடப்படாத படங்களைக் குறிப்பிடுகின்றன.
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1997 தேவதை சீர் தஞ்சை ராமசாமி என்று குறிப்பிடப்பட்டார்
2001 மாயன் மாயனின் தந்தை
நந்தா கிராமத்து மனிதர் தஞ்சை ராமசாமி என்று குறிப்பிடப்பட்டார்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் சுந்தரலிங்கம் [8]
2003 பிதாமகன் சித்தனின் பராமரிப்பாளர்
2005 சண்டக்கோழி கிராமத்து மனிதர்
2007 பருத்திவீரன் கிராமத்து மனிதர்
2008 வாழ்த்துகள் சுப்பையா
2011 சங்கரன்கோவில் மாட்டு வண்டி ஓட்டுபவர்
2016 கிடா பூசாரி மகுடி தாத்தா
ஜோக்கர் 'போட்டி கேஸ்' பொன்னூஞ்சல்
கிடாரி கொம்பையாவின் நண்பர்
2018 சண்டக்கோழி 2 கிராமத்து மனிதர்
2019 கே. டி. கருப்புதுரை (கே. டி.)
2022 கொம்புவச்ச சிங்கம் கிராமத் தலைவர்
வாய்தா அப்புசாமி
திருச்சிற்றம்பலம் பழத்தின் தாய்வழி தாத்தா
செப்பாலனி உந்தி தெலுங்குத் திரைப்படம்
2023 தமிழ்க் குடிமகன் பேச்சிமுத்து
2024 ஆலன் தியாகுவின் தாத்தா
2025 மாயக்கூத்து வழிகாட்டி

தொலைக்காட்சி

ஆண்டு பெயர் பாத்திரம் அலைவரிசை Ref(s)
2019 தறி இராமசாமி கலர்சு தமிழ் தொலைக்காட்சி [9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Saravanan, T. (15 September 2011). "On the stage of life". The Hindu.
  2. விகடன் தடம் இதழ் ஆகத்து 2018
  3. "Mu Ramaswamy: Training in just theatre is not enough for cinema". சினிமா எக்ஸ்பிரஸ். 27 November 2019. Retrieved 1 July 2020.
  4. M, Ramakrishnan (19 April 2017). "'Joker deserved the National Award'". The Hindu.
  5. Shrikumar, A. (25 November 2019). "Meet the street-smart 'thatha' and super-cool kid from 'KD'". The Hindu.
  6. Santhanam, Kausalya (12 June 2014). "Team work at its best". The Hindu.
  7. Vaidyanathan, Renuka (18 May 2017). "Kalki's Prince charms Singapore audience". The Hindu.
  8. "Director Bala was Shocked! - Mu Ramasamy on Nanda & Pithamagan". Vikatan. 21 November 2019.
  9. "New serial Thari to premiere soon". The Times of India. 28 March 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=மு._இராமசாமி&oldid=469608" இலிருந்து மீள்விக்கப்பட்டது