மொகில்
மொகில் (Mohil), மியால், மோயல் அல்லது மோகல் என்பது சௌகான் ராஜபுத்திரர்களின் ஒரு குலமாகும்.
உள்ளூர் பாரம்பரியத்தின்படி, லடவுன் பகுதியின் ஆட்சியாளரான ராவ் ஜெய் சிங், தண்ணீர் எடுக்க நகர வாயில் வழியாகச் செல்லும் பெண்கள் குழுவைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு அச்சுறுத்தும் காளை சாலையில் வந்தது. ஒரு முஸ்லிம் பெண், காளையைக் கையால் தடுத்து வழியிலிருந்து தள்ளிவிட்டார். அந்தப் பெண்ணின் தைரியத்தினையும் வீரத்த்தினையும் பார்த்த ராவ், அந்தப் பெண்ணால் மிகவும் ஈர்க்கப்பட்டார். இத்தகைய துணிச்சலான பெண்ணின் சந்ததியினர் துணிச்சலானவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து, ராஜா அவளை தனது தந்தைக்கு திருமணம் செய்து கொள்ள முன்மொழிந்தார். ராஜா ஒரு முஸ்லிமாக மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அந்தப் பெண் தனது சம்மதத்தை அளித்தார். இருப்பினும், மொகில்களின் வரலாறு தெரியவில்லை மற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இராசத்தானி கியாத்தில் இது குறித்த எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. [1]