அந்த நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Balajijagadesh
No edit summary
 
imported>Sukanthi
"{{Infobox_Film | name = அந்த நாள்| image = Andha Naal.jpg | image_size = | | caption = | director = சுந்தரம் பாலச்சந்தர் | producer = ஏவிஎம் | writer = ஜாவர் சீதாராமன் | starring = சிவாஜி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

06:33, 21 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்

அந்த நாள்
இயக்கம்சுந்தரம் பாலச்சந்தர்
தயாரிப்புஏவிஎம்
கதைஜாவர் சீதாராமன்
இசைஏ வி எம் இசைக்குழு
நடிப்புசிவாஜி கணேசன்
பண்டரிபாய்
ஒளிப்பதிவுமாருதி ராவ்
படத்தொகுப்புஎஸ். சூரியா
வெளியீடு1954
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம்.[1] இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதை

இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.[1]

தயாரிப்பு

முதலில் இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என். விஸ்வநாதன் என்னும் மேடை நடிகர். சில நாள் படிப்பிடப்பிற்கு பிறகு காட்சிகளைப் பார்த்த ஏவிஎம் அவர்கள், படத்தில் தான் எதிர்ப்பார்த்த விறுவிறுப்பு இல்லை என்று தெரிவித்து, படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றுக் கூறி மீண்டும் அனைத்து காட்சிகளையும் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து படமாக்கப்பட்டது.[2] இத்திரைப்படத்திற்கு முதலில் ஒரு நாள் என்று தலைப்பு இருந்தது. ஏவிஎம் அவர்களுக்கு அத்தலைப்பு பிடிக்காததால் பின்னர் அந்த நாள் என்று படத் தலைப்பு மாற்றப்பட்டது. [2]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Andha Naal 1954 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை
  2. 2.0 2.1 Galatta Tamil கலாட்டா தமிழ் (2024-06-07). "திமிரா பேசி FLOP ஆன HERO கடைசியில நடந்த TWIST AVM Kumaran Breaks Secret". Retrieved 2024-06-08.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=அந்த_நாள்&oldid=112290" இலிருந்து மீள்விக்கப்பட்டது