ஆகத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>தணிகைவேல் மாரியாயி தமிழில் கிரந்தம் தவிர்ப்போம் |
imported>KanagsBOT சி →மேற்கோள்கள்: clean up using AWB |
||
| வரிசை 28: | வரிசை 28: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{நாட்கள்}} |
|||
{{மாதங்கள்}} |
|||
{{நேரம்}} |
|||
{{Authority control|state=collapsed}} |
|||
[[பகுப்பு:மாதங்கள்|8]] |
[[பகுப்பு:மாதங்கள்|8]] |
||
11:42, 17 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| << | ஆகத்து 2026 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | 31 | |||||
| MMXXVI | ||||||
ஆகத்து அல்லது ஓகஸ்ட் (August, /ˈɔːɡəst/ (Audio file "En-us-August.ogg" not found) AW-gəst) என்பது யூலியன், மற்றும் கிரெகொரியின் நாட்காட்டிகளில் ஆண்டின் எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.[1]
கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (Sextilis) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், சனவரி, பெப்ரவரி மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் யூலியசு சீசர் யூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் அகசுடசு சீசரின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகத்து எனப் பெயரிடப்பட்டது.
காலநிலையின் அடிப்படையில், தெற்கு அரைக்கோளத்தின் ஆகத்து மாதம் வடக்கு அரைக்கோளத்தின் பெப்ரவரி மாதத்திற்கு சமனாகும்.
ஆகத்து மாத சிறப்பு நாட்கள்
- பிலிப்பீனிய மொழிகள் மாதம்
- ஆகத்து 5 - நண்பர்கள் நாள்
- ஆகத்து 6 - இரோசிமா நாள்
- ஆகத்து 6 - யமேக்கா விடுதலை நாள்
- ஆகத்து 9 - நாகசாகி நாள்
- ஆகத்து 9 - சிங்கப்பூர் விடுதலை நாள்
- ஆகத்து 12 - உலக இளைஞர்கள் நாள்
- ஆகத்து 13 - பன்னாட்டு இடதுகை பழக்கமுள்ளவர்கள் நாள்
- ஆகத்து 14 - பாக்கித்தான் விடுதலை நாள் (1947)
- ஆகத்து 15 - இந்தியாவின் விடுதலை நாள் (1947)
- ஆகத்து 15 - கொரியாவின் விடுதலை நாள்]]
- ஆகத்து 19 - சர்வதேச புகைப்பட நாள்
- ஆகத்து 29 - இந்திய தேசிய விளையாட்டு நாள்
- ஆகத்து 31 - மலேசியாவின் விடுதலை நாள்
- ஆகத்து முதல் வாரம் - உலக தாய்ப் பாலூட்டல் வாரம்
- ஆகத்தின் நடு வாரம் வால்மழையின் உச்சம்.
மேற்கோள்கள்
- ↑ "August." Encyclopædia Britannica. 2008. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 23 செப்டம்பர் 2008.