'''மணப்பாறை''' ([[ஆங்கிலம்]]:''Manapparai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில் [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[நகராட்சி]] ஆகும். [[திருச்சி]]யில் இருந்து [[மணப்பாறை]] சுமார் 40கிமீ தொலைவில் உள்ளது. மேலும் இவ்வூரில் [[மணப்பாறை முறுக்கு]] மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். " மண " என்பதற்கு தமிழில் கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடினமான பாறைகள் கொண்ட நிலபகுதி என்பதாகும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> மேலும் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட எல்லைகளை தனியாக பிரித்து அதை [[மணப்பாறை வட்டம்|மணப்பாறை]]யை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக '''மணப்பாறை மாவட்டம்''' ஆக அறிவிக்க தகுதி உடைய நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வூரின் [[புவியியல் ஆள்கூற்று முறை|புவியியல் ஆள்கூறுகள்]] {{coord|10.6089|N|78.4233|E}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 208 [[மீட்டர்]] (682 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 87.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/manapparai-population-tiruchirappalli-tamil-nadu-803635 மணப்பாறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==கல்வி==
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.
== போக்குவரத்து ==
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி<ref>{{Cite web|url=https://www.google.com/maps/place/Kovilpatti,+Tamil+Nadu+621305/data=!4m2!3m1!1s0x3baa7a0ee1d12a21:0xf9ee06dc6291b185?sa=X&ved=2ahUKEwjKwdjQvuzuAhXZb30KHe2-AlEQ8gEwAHoECAQQAQ|title=கோவில்பட்டி|website=கோவில்பட்டி|language=ta-US|access-date=2021-02-20}}</ref> ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது
== பேருந்து போக்குவரத்து ==
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[திண்டுக்கல்]], [[பழநி]], [[தேனி]] போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.
மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின்தமிழ்நாடுமாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். திருச்சியில் இருந்து மணப்பாறை சுமார் 40கிமீ தொலைவில் உள்ளது. மேலும் இவ்வூரில் மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். " மண " என்பதற்கு தமிழில் கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடினமான பாறைகள் கொண்ட நிலபகுதி என்பதாகும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட எல்லைகளை தனியாக பிரித்து அதை மணப்பாறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக மணப்பாறை மாவட்டம் ஆக அறிவிக்க தகுதி உடைய நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,934 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,510 ஆகும். அதில் 20,139 ஆண்களும், 20,371 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4090 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,849 மற்றும் 73 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 65.67%, இசுலாமியர்கள் 11.3%, கிறித்தவர்கள் 22.95% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[5]
கல்வி
இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் மற்றும் இரண்டு கல்லூரிகள் உள்ளன.
போக்குவரத்து
மணப்பாறை திருச்சிக்கு திண்டுக்கல்லுக்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 83 (பழைய எண் - 45)-இல் அமைந்துள்ளது. மணப்பாறை நகரம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, கோவில்பட்டி[6] ஆகிய நகரங்களுடனும் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது
பேருந்து போக்குவரத்து
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. திருச்சி, திண்டுக்கல், பழநி, தேனி போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து அடிக்கடி பேருந்து சேவை உள்ளது.
மணப்பாறையிலிருந்து கீழ்காணும் நகரங்களுக்கும் பேருந்து சேவை உள்ளது.