ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>தமிழ்க்குரிசில் உரை திருத்தம் |
|||
| வரிசை 28: | வரிசை 28: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். |
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். |
||
இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. |
|||
==விளையாட்டு== |
|||
துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. |
|||
உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன. |
|||
== மகளிர் கல்லூரி == |
== மகளிர் கல்லூரி == |
||
15:53, 14 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
| ஒரத்தநாடு | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | 10°37′N 79°16′E / 10.62°N 79.27°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இரா. ரேவதி, இ. ஆ. ப [3] | ||||||
| பெருந்தலைவர் | சே. திருமங்கை | ||||||
| சட்டமன்றத் தொகுதி | ஒரத்தநாடு
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 10,172 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
ஒரத்தநாடு (ஆங்கிலம்: Orathanadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.
பெயர்க்காரணம்
ஒரத்தநாடு எனும் பெயர் உறந்தைநாடு என்பதிலிருந்து வந்ததாகும். உறந்தை என்பது பண்டைச் சோழநாட்டுத் தலைநகரான உறையூரைக் குறிக்கும். சோழன் உறந்தையர்கோன் எனப்பட்டான். உறந்தைநாடு என்பதே உறத்தநாடு என்றாகிப் பின்னர் உரத்தநாடாகி பின்னும் மருவி ஒரத்தநாடு ஆகியது. [4]
மக்கள்
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,172 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஒரத்தநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 82.06% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75% விட கூடியதே. ஒரத்தநாடு மக்கள் தொகையில் 11.95% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். இது முத்தம்பாள்புரம் எனவும் முத்தம்பாள்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
விளையாட்டு
துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கபடி ஆகிய விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. உள்ளூர் அளவிலான விளையாட்டுப் போட்டிகளும் அதிகரித்திருக்கின்றன.
மகளிர் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரடி மகளிர் கலைக்கல்லூரி இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றது. இக்கல்லூரி இங்கு அமைந்ததன் மூலம் கல்வி அறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
ஆலயம்
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது மாபெரும் ஆலயமாக, 100 ஆண்டுகளுக்கு முந்தைய அழகிய கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பாகும்.
ஆட்சி
ஒரத்தநாடு வட்டத்தின் அரசுத் தலைமையகம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தின் அனைத்துப் பிரிவுகளும் இங்கு அமைந்துள்ளன.
போக்குவரத்து
தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் அதிகளவிலான பேருந்துகள் இயங்குகின்றன. சிற்றூர்களுக்கு தனியார் சிற்றுந்துகளும் உள்ளன. போக்குவரத்தில் தனியார் சொகுசுப் பேருந்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கைலேயே இயங்குகின்றன. சென்னைக்கும் திருச்சிக்கும் செல்ல பேருந்து வசதி உள்ளது. பிற ஊர்களுக்கு செல்ல தஞ்சாவூர் அல்லது பட்டுக்கோட்டைக்குச் செல்ல வேண்டும்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ உறந்தைவளர் நாட்டுவளப்பம், சின்னப்பன் சேதிராயர்
- ↑ http://www.census.tn.nic.in/pca2001.aspxUrban - Thanjavur District;Orathanadu Taluk;Orathanadu (Mukthambalpuram) (TP) Town