ஆள்கூறுகள்: 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218

பவானி

தமிழர்விக்கியிலிருந்து
45.116.113.105 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 12:04, 15 ஆகத்து 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (பவானி கூடுதுறை)
Jump to navigation Jump to search
பவானி
—  நகரம்  —
பவானி
அமைவிடம்: பவானி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் கே.சி.கருப்பண்ணன்
ஆணையர் பழனிச்சாமி
சட்டமன்றத் தொகுதி பவானி

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சி. கருப்பண்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

38,778 (2001)

17,870/km2 (46,283/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/


பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும்.

இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் பெற்றவை.

இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள குமாரபாளையத்தை இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு,காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது.

பவானி கூடுதுறை

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் 'திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்... பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடுதுறையில் அமைந்துள்ளது, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பவானி&oldid=190500" இலிருந்து மீள்விக்கப்பட்டது