திருவையாறு
| திருவையாறு | |||||||
| — பேரூர் — | |||||||
| ஆள்கூறு | 10°53′N 79°06′E / 10.88°N 79.1°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| பெருந்தலைவர் | சி.நாகராஜன் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | திருவையாறு
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை | 14,511 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
|||||||
|
குறியீடுகள்
| |||||||
திருவையாறு (ஆங்கிலம்:Thiruvaiyaru), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில்,தஞ்சாவூர் நகரத்தில் இருந்து வடக்கே 12 கி.மி. தொலைவில் திருவையாறு அமைந்துள்ளது.
வரலாறு
பெயர்க் காரணம்
திரு+ஐந்து+ஆறு காவிரி,மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளக பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது.
திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்
பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
தியாகராஜ ஆராதனை விழா
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான தியாகராஜ சுவாமிகள் நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், தியாகராஜ ஆராதனை விழா என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் சென்னையில் திருவையாறு என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு சென்னையில் ஆண்டு தோறும் இசை விழாவை நடைபெற்று வருகின்றது.