மூலனூர் (ஆங்கிலம்:Mulanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலமையிடமும், தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை கொடுமுடி என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மூலனூர்
மூலனூர்
இருப்பிடம்: மூலனூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் தாராபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,223 (2011)

314/km2 (813/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

48.5 சதுர கிலோமீட்டர்கள் (18.7 sq mi)

238 மீட்டர்கள் (781 அடி)

இணையதளம் www.townpanchayat.in/mulanur

அமைவிடம்

இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 67 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் தாராபுரம் 20 கிமீ; வடக்கில் வெள்ளக்கோயில் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

இது 48.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238 மீட்டர் (780 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மூலனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Mulanur Population Census 2011
  5. "Mulanur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=மூலனூர்&oldid=176680" இலிருந்து மீள்விக்கப்பட்டது